Friday, October 16, 2015


தசாவதாரம் - ஸ்கந்தபுராணம் கூறும் விளக்கம் - 1
=========================================================
வணக்கம்! வணக்கம்! நண்பர்களே! நான் சில நாட்களாக ஸ்கந்த புராணத்தின் சிறிய பகுதியை படிக்க முற்படுகிறேன். இதில் உள்ள முக்கியமான சில கதைகளை முடிந்த வரையில் ரசமாக கூற முற்படுகிறேன். நிச்சயமாக இதில் நிறைய தகவல்களையும் அதே சமயத்தில் திருத்தங்களும் இருக்கும். படித்து லைக் மட்டும் போடாமல், கமண்டுகளையும் அளித்து தவறேதும் இருந்தால் திருத்துமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
ஸ்கந்த மகாபுராணம் பலப்பல ஸ்லோகங்களை உள்ளடைக்கியது. இது பரமேஸ்வரரான சிவனாரை பற்றி கூறுவது சங்கரசம்ஹிதை.இதனை "புராணங்களின் மூலம்" என்று சொல்லுவர், அந்த கடலில் துளிகள் தான் இவை. இதில் விஷ்ணுவை பற்றி சில பகுதிகள் குறிப்பிடப்பட்டுள்ளன இதை ஒரு தொடர் பதிவாக போடலாமென்ற எண்ணம்.
NOTE! NOTE! - இந்த க்ருப்பில் வைஷ்ணவர்கள் இதை படிக்கும்போது சிவனை பற்றி உயர்வாகவும் விஷ்ணுவை பற்றி தாழ்வாகவும் சித்தரிக்க பட்டுள்ளது என்று சண்டை போட கூடும். ஒன்று மட்டும் சொல்லிகொள்கிறேன். இது முழுக்க ஸ்கந்த புராணம் கூறியுள்ள புராண செய்திகளே அன்றி இதில் துளியும் எனக்கு சம்பந்தம் இல்லை. யுகங்கள் கடந்த சரித்திரத்தினை நமக்கு தெரிந்து கொள்ளவே உரிமையுண்டே தவிர தர்க்கம் செய்வதில் எந்த புண்ணியமும் இல்லை. இதில் நிறைய இடைசெருகல் உள்ளது என்று பலர் விளக்கம் கேட்கும்போது எனக்கு தெரிவித்தனர். ஆனால் படிக்கும்போது எனக்கு இது இடைசெருகல் போல் தெரியவில்லை. இதை சொன்ன பௌரானிகரான சூத மாமுனிவரே தான் விளக்கம் தரவேண்டும் அன்றி நான் அல்ல
மேலும் விஷ்ணுவானவர் சிவனின் ஸ்வரூபம், சிவனோ விஷ்ணு ஸ்வரூபம் என்பது சந்தியாவந்தனத்தில் ஒரு வாக்கு . அவர் சூட்சுமமாய் இருந்து நமக்கு செய்ய வேண்டியதை விஷ்ணுவானவர் சகஜ ரூபமாய் அவதரித்து நம்மை ரட்சிக்கிறார் என்பதை எவராலும் மறுக்க முடியாது.
முதலில் பரமேஸ்வரர் என்பவருக்கும் ருத்திரர் என்பவருக்கும் உள்ள வித்தியாசங்களை பற்றி தெரிந்துகொள்வோம். ருத்திரர் என்பவர்கள் 11வர். இவர்கள் அந்த சிவஸ்வரூபமாக உள்ளவர்கள் ஆவர்.இவர்களுக்கும் அந்த பரமேஸ்வரரை போல் உருவமும் சூலமும் ரிஷபவாகனமும் சக்தி தேவியரும் உண்டு.
இவர்களே திரிமூர்த்திகள் எனப்படும் பிரம்ம விஷ்ணு ருத்திரர்கள். எனவே சிருஷ்டி ஸ்திதி சம்ஹாரம் எனப்படும் தொழிலில் மூன்றாவது சம்ஹாரதஹை இந்த ருத்திரர்களின் மூலமே அந்த பரமசிவனார் செய்விக்கிறார். என்றாலும் ஆக்கல், காத்தல் அழித்தல் என்பதனை விளையாட்டை செய்விப்பது அந்த சம்புவே என்று சிவபுராணம் மற்றும் ஸ்கந்த புராணம் கூறுகிறது. இவாறு புரிந்து கொண்டால் தான் இந்த புராணத்தை உணர்ந்து கொள்ள முடியும்.
சத்துவகுண, ரஜோகுண, தமோகுண ஸ்வரூபமாக உள்ள, அல்லது அந்த குண விசேஷங்கள் உள்ள மூர்த்திகள் எவையும் நிர்குண ச்வரூபமுள்ள - பிரம்ம ஸ்வரூபம் உள்ள கடவுள் இல்லை என்பதே அத்துணை புராணங்களும் சொல்லும் கூற்று ஆகவே எஹ்த்னா புராணத்திற்கு எந்த தெய்வம் கர்த்தாவோ, அந்த தெய்வத்தினை நிர்குண ச்வரூபமுள்ள தெய்வம் என்று புராணங்கள் கூறுகின்றன. ஸ்கந்த புராணத்தில் அந்த பரமேஸ்வரரே நிர்குண ஸ்வரூபமாய் சகலத்திற்கும் உள்ளும் புறமுமாய் இருந்து ஆட்டுவிக்கும் தெய்வம் என்று பகர்கின்றது.
இத்தகைய பரமேஸ்வரருக்கு மிகவும் முக்கியமான கணாதிபர்கள் கணபதி, சுப்பிரமணியர், சாஸ்தா, நந்திகேஸ்வரர், பைரவர் மற்றும் வீரபத்திரர், இதில் கணபதியும் ஸ்கந்தனும் சாஸ்தாவும் அவரின் திருக்குமாரர்கள் என்பது தெரிந்ததே. பைரவரும் வீரபத்திரரும் அவரின் ருத்திர அம்சங்களாவர். இவர்கள் முறையே கைலாயம் மற்றும் அதனை ஒட்டியுள்ள மண்டலங்களின் அனைத்து கணங்களுக்கும் அதிபதிகளாக அதிகாரம் செலுத்தி வருகின்றனர். இவர்கள் இருக்கும் பகுதி தங்கமயமான ஜோதிஸ்வரூபமுள்ள சிவலோகம் எனப்படும். (எத்தனை லோகங்கள் உள்ளன, அவைகளின் அதிகாரிகள் யார், அவர்கள் எங்கு இருக்கிறார்கள் என்று ஒரு பெரிய அத்தியாயமே உள்ளது. இதனை பற்றி மிகவும் விரிவாக அடுத்த பதிவில் பதிவிடுகிறேன். )
அதன் கீழ் விஷ்ணுலோகம் உள்ளது இது வெண்மையான பார்க்கடலால் சூழபெற்ற பகுதியாகவும் பல த்வீபங்களையும் அதில் விஷ்ணு கணங்களையும் உள்ளடக்கியது. இதில் தான் ஆதி சேஷன் மேல் பள்ளிகொண்டு விஷ்ணு அவர் பத்தினிகள் லக்ஷ்மி, பூமி தேவி நீளா தேவி சகிதமாக, சுதர்சனம், பாஞ்சசன்னியம்,சார்ங்கம், மற்றும் அவர் வாகனமான கருடன் சகிதமாக ஸ்திதி பரிபாலனம் செய்யும் அதிகாரம் செலுத்தி வருகிறார். இவரின் மானச புத்திரன் மன்மதன். ப்ரித்யும்ணன், அவர் பாத்திரன் அநிருத்தன்.
அதன் கீழுள்ள லோகமானது சத்தியலோகமான பிரம்மலோகம். இதில் பிரம்ம தேவன் தன் பத்தினிகளான சரஸ்வதி, காயத்ரி , சாவித்திரி சகிதமாக, வெண்தாமரை மீது அமர்ந்து ஹம்சவாகனம் பெற்று ஸ்ருஷ்டி அதிகாரத்தினை பெற்றிருக்கிறார். இவருக்கு பல கோடி மைந்தர்கள் நம்மையும் சேர்த்து முக்கியமாக,நாரதர், தட்சன், காச்யபர், சனத்குமாரர்.
இவர்களின் லோகந்களின் கீழுள்ளது சுவர்க்கலோகம். இதில் இந்திரன் தன் பத்தினியான இந்திராணியுடன்,தன மகன் ஜெயந்தனின் சகிதமாக, முப்பத்துமுக்கோடி தேவர்களுடன் படை, பரிவாரங்களோடு, ஐராவதம், கர்ப்பக விருட்சம், காமதேனு, அமிர்த கலசம் கொண்டு ஜீவிக்கின்றனர். நவக்கிரக ஆளுமையின் மூலம் ஜீவர்களின் வாழ்க்கைக்கு தக்கபடி ஆட்சி அதிகாரம் செலுத்துகிறார்.
இவர்களுக்கு கீழே அஷ்ட்ட திக்கு தேவர்களான குலகுரு ப்ரிகச்பதியுடன் ,சூரியன் சந்திரன், நிறுதி,வருணன்,அக்னி, குபேரன், வாயு, சனி, யமன், ஆகியோர்
சூரியனின் மண்டலம். சந்திர மண்டலம், பரிபாலனம் செய்கின்றனர். இதற்க்கு கீழ் அதல, விதல, சுதல, தலாதல, ரசாதல, பூலோக, பாதாள லோகம், இதில் நாக தேவதைகள், மற்றும் அசுரர்கள் உள்ளனர். யமபட்டினத்தில் நரகம் உள்ளது.
இங்கு நாம் விஷ்வுவின் பரிபாலனத்தில் பூலோகத்தில் உள்ள ஜம்புத்வீபத்தில் பரத கண்டத்தில், தக்ஷின திசையில் உள்ளோம் என்று தெரிந்து கொள்க.
இத்தனையும் ஒரு "ஹைரார்க்கி" முறைப்படி பதவி அதிகாரங்கள் கொண்டிருக்கிறது இந்த புராணத்தின் சிறப்பம்சமாகும். இதில் விஷ்ணுவின் ஒரு ஆயுள் காலத்தில் ஒருவருடத்தில் பல பிரம்மாக்கள் படைக்க படுகின்றனர், பிரம்மாவின் ஒரு ஆயுள் காலத்தில் பல இந்திரர்கள், எமன்கள், வருணன், நிறுத்தி ஆகியவர் படைக்க படுகின்றனர். பிரம்மாவின் ஒரு இரவு ஒரு பிரளையம், ஒரு வருட ஆயுள் ஒரு மகாப்ரளையம் என்பதாக சொல்லப்படுகிறது. அப்போது நாம் எந்த மூலைக்கு என்று தெரியவில்லை.
மேலும் தொடரும்...

      
 தசாவதாரம் - ஸ்கந்தபுராணம் கூறும் விளக்கம் - 2
=====================================================
சமயபுரம், உத்தமர் கோயில், திருக்கருகாவூர், பட்டீஸ்வரம், குடந்தை, அன்னியூர் போன்ற க்ஷேத்திரங்களுக்கு அடியேன் சென்றதால் தொடர் பதிவை செய்ய முடியவில்லை. ஆதரவிற்கு நன்றி.
நான் இந்த பதிவினை போட்டதும் எனக்கு சற்று வருத்தம் தான். ஏன்டா இதை போய் நம் க்ரூப்பில் போடுகிறோமே இதன் மூலம் வம்பு வரப்போகுது என்று, ஆனால் திருச்சி சுங்க சாவடி அருகில் அழகாய் அமைத்திருக்கும் ஐந்தாவது பூலோக வைகுண்டமான திவ்ய தேச க்ஷேத்திரம் உத்தமர் கோயில். இங்கு சுவாமி பூரணவல்லி தாயார், ஸ்ரீ மஹாலக்ஷ்மி தாயார் சமேத புருஷோத்தமர் எனப்படும் திருக்கரம்பனூர் உத்தமன்.இவர் இங்கு கிடந்த கோலத்தில் அருள்பாலிக்கின்றார். அவரை தரிசித்ததன் பின்னர் எனக்கு பரம திருப்தி. அவருக்கே படி அளக்கும் பூரணவல்லி தாயார். அவருக்கு மட்டும் அல்லாது இந்த உலக மக்கள் அனைவருக்கும் பூரனத்துவதினை அள்ளி அள்ளி வழங்கும் பூரணவல்லி தாயார் என்று சொல்ல தகும். பார்த்துக்கொண்டே இருக்கலாம் போல இருந்தது. பிறகு ஒரு இன்ப அதிர்ச்சி வலம் வந்தால் குரு தட்சிணா மூர்த்தி அட! என்னடா அதிசயம் என்று சுற்றி உத்தமர் சந்நிதியை வலம் வந்தால் பின்னால் ஒரு கோயில்! அதில் கம்பீரமாக லிங்க வடிவில் ஏகாந்தத்தில் உள்ள அருள்மிகு சௌந்தர்ய பார்வதி சமேத பிட்சாடனர். அம்மன் சின்ன மூர்த்தி ஆனால் அழகோ அழகு.சரி என்று ஒரு சுற்று சுற்றி வந்தால் பெரிய அதிசயம். பிரகாரத்தில் தனி தனி சந்நிதியில் ஞான குரு பிரும்மாவும் ஞான சரஸ்வதியும். அருமையாக சந்நிதி கொண்டு அருள் பாலிக்கின்றனர். ஒரே நேரத்தில் பிரம்ம, விஷ்ணு, சிவனாரினை குடும்பத்துடன் பார்த்ததில் இது என்ன கைலாசம், என்ன வைகுண்டம் என்ன பிரம்மலோகம்! எல்லாமே இங்கே இருக்கும் போது என்று பெருக்கெடுத்த இன்பம் எல்லையில்லாதது!
அங்கு இன்னொரு ஒரு பெரிய அதிசயம் தசரத லிங்கம். எங்குமே பார்த்திராத அதிசயம். அப்படி என்றால் தசரதன் திக் விஜயம் இந்த அகண்ட இந்தியா முழுவதும் இருந்திருக்கும் அல்லவா? இது ஒரு சரித்திர சான்று. ஸ்தல விருட்சம் செவ்வாழை மரம்.
இதில் இருந்து என்ன தெரிகிறது என்றால் சுவாமி எல்லோரும் எதோ ஒரு தேவ காரியதிர்க்காகவே இருந்துள்ளனர். ஆனால் அதை உணராமல் பேதம் பிரித்து நமக்குள்ளே சிறுமை ஏற்படுத்தி நமக்கும் ஹிந்து மதத்திற்கும் நாமே வெட்க கேட்டினை ஏற்படுத்தி கொண்டிருக்கிறோம்.
முன்னர் சொன்னது போல இந்த பதிவில் சிவ புராணம் மையமாக வருதலால் விஷ்ணுவின் அவதார முடிவு பற்றி செய்திகள் இருக்கும் அதனால் சைவ வைஷ்ணவ பேதம் மற்றும் சிவன் ஒசத்தியா விஷ்ணு தழ்த்தியா என்று வேண்டாத போஸ்டுகள் போடுவது தேவையில்லை என்பது எனது வேண்டுகோள். நான் சைவ ஸ்மார்த்த தெலுங்கு பிராமணன் ஆயினும் என் சர்மா ஸ்ரீராம் தான்.
அறியும் சிவனும் ஒண்ணு அறியாதவன் வாயில் மண்ணு!!


தசாவதாரம் - ஸ்கந்த புராண விளக்கமும் - 3
==============================================
ஸ்கந்த புராணத்தில் சூத முனிவர் கூறிய சிவசம்ஹிதையில் விஷ்ணுவின் தோற்றமும், அவரின் அவதார மூலமும், அவர் எடுத்த விதவிதமான அவதாரங்களின் விளக்கமும் முடிவுகளும் விரிவாக கூறப்பட்டுள்ளதை இனி பார்ப்போம்.
பரமேஸ்வரர் பார்வதியின் மூலம் உண்டாக்கும் ஆனந்த நடனத்திலும் அனைத்து ஸ்தாவர ஜன்கமங்களும், லோகங்களும், அண்டசராசரமும் உருவாகின்றன. அவர் எண்ணப்படியே அனைத்து லோகங்களும் படைக்கபடுகின்றன.மகா பிரளயம் ஏற்ப்படும் முன்னர் விஷ்ணு பிரம்மா என அனைத்து மூர்த்திகளையும் அவர் பிரார்த்தனை படியும் இஷ்டமுடன் அவர்களை அழித்து பிரளைய தாண்டவம் ஆடி, சுடலையாக செய்து அவர்களின் சாம்பலை பூசி ருத்திர மூர்த்தியாக இந்த ஜகத்தினை அழிக்கிறார்.பிரளையம் முடிந்த பின் இந்த அண்டம் துவங்கும் பொது பூர்வத்தில் விஷ்ணுவானவர் ஆலிலை மேல் பள்ளி கொண்டு பார்க்கடலில் மிதந்து வருவதே விஷ்ணுவின் அவதாரமாக ஸ்கந்த புராணத்தில் கூறப்படுகின்றது. மேலும் அவர் நாபியிலிருந்து பிரம்மன் பிறக்கின்றார் என்றும் அவர்கள் இருவரும் சிவனாரை தொழுது அனேக வருடங்கள் தியானித்து பிரம்மத்தின் இரகசியத்தினை அடைந்து தத்தம் கடமைகள் உபதேசிக்க பெற்று தத்தம் தொழிலை செய்கின்றனர் என்றும்.ஸ்கந்த புராணம் கூறுகிறது

ஒருமுறை தம் அதிகாரத்தின் அகங்காரத்தினால் தாமே சாஸ்வதம் என்று நினைந்து பிரம்ம விஷ்ணு ஆகிய இருவரும் சண்டை இட்டு கொள்ள சம்புவானவர் இருவரையும் தம் அடிமுடி காணுமாறு பணிக்க, பூமியை பிளக்க செய்து ஸ்வேத வராகமாக நாராயணர் பல்லாயிரம் வருடங்களாக குடைந்து அடிக்கு செல்லுதலையும் பிரம்மன் அன்னபட்சி உருவமாக எடுத்து முடி காண வானில் செல்லுவதை முதல் அவதாரமாக கூறுகிறது.
விஷ்ணுவானவர் அடியை காணாது தன் அகங்காரதினை விட்டு தன்னுருவம் எடுதுவிடவே பிரம்மாவோ தான் முடியை கண்டதாக போய்யுரைக்கிறார். சினம்கொண்ட சம்பு உடனே சூரிய மண்டலத்தில் உள்ள தன் அம்சத்தினை பைரவராக உண்டாக்கி பிரம்மாவின் ஐந்தாவது சிரசினை கொய்துவிடுமாறு பணிக்கிறார். அப்போதே அதனை செய்து முடித்து வேடிக்கையாக பைரவர் அந்த பிரம்ம கபாலத்தினை ஏந்தி பிட்சாடனராக வலம் வந்து அனைத்து உலகங்களுக்கும் சென்று பிச்சை ஏந்தி கடைசியில் விஷ்ணுவிடம் சென்று கையேந்த உடனே விஷ்ணுவும் தன் நெற்றியை பிளந்து குருதி முழுவதும் அதில் விட்டு இறுதியில் இறக்கிறார். அவர் பத்தினிகளின் வேண்டுகோளுக்கு இறங்கி மீண்டும் புத்துயிரளித்து அவரை காக்கின்றார். நெற்றியின் மத்தியில் செங்கீற்றுடன் சிவ சின்னமாய் இருக்க பைரவர் அருளவே அதுவே நிலைதுள்ளதாக கூறப்படுகிறது.
    
மேலும் ஒருமுறை தேவ அசுர யுத்தத்தில் தேவர்களின் தோல்வியை தவிர்க்கவும் அரக்கர்களை வதைக்கவும். விஷ்ணுவானவர் இந்திரனுடன் சேர்ந்து போர் செய்து அரக்கர்களின் தரப்பில் பெரும் அழிவினை உண்டாக்கினார். அவரின் போர் உக்கிரத்தினை தாளாமல் எஞ்சிய அசுரர் அனைவரும் பிருகு முனிவரின் ஆசிரமத்தில் தஞ்சமடைந்தனர். அங்கே பிருகு முனிவர் அல்லாமல் அவர் பத்தினி கியாதி இருந்தாள். செய்வதறியாது தவித்த அசுரர்களுக்கு கியாதி சரணாகதி அளிக்கவே அங்கு வந்த விஷ்ணுவானவர் கியாதியின் விளக்கத்தினை ஏற்காமல் அவள் தடுத்ததையும் மீறி ஏற்காமல் அவள் தலையை வெட்டி சரணடைந்த அசுரர்களையும் சம்ஹாரம் செய்து விடுகிறார்.
சிறிது காலம் கழித்து தம் ஆசிரமத்திற்கு வரும் பிருகு முனிவர் நிலைகுலைந்த தம் ஆசிரமத்தில்அசுரர்களின் பிணங்களும் அதன் நடுவே அசுரர்களுடன் தலை வெட்டப்பட்டு கிடக்கும் கியாதியின் நிலையை கண்டு மனம் நொந்து ஞான திருஷ்டியின் மூலம் நடந்ததை அறிகிறார். அதனால் நேரே விஷ்ணுலோகம் சென்று அவரை கோபித்து தன் மனைவி மற்றும் சரணடைந்தவர்களை கொல்லும் விஷ்ணுவிற்கு பல கோடி ஜென்மக்களும் உடைய யோனி பிறப்புக்களும் அப்பிரப்புக்கள் அனைத்திலும் பத்தினியை இழந்து தம்மை போலவே தவிக்கவேண்டும் என்று சபித்து விட்டு அகன்று விடுகிறார். பின்னர் மிருத சஞ்சீவினி வித்தையால் தம் மனைவியை மீட்டு விடுகிறார்.
இதனால் பதறிய விஷ்ணு, கொடிய அரக்கர்களை கொல்லுவது தம்முடைய தர்மமே அன்றி எவ்வாறு பாவமாகும் என்று நினைத்து பிரம்ம இந்திராதி தேவர்களோடு கைலாயம் சென்று முறைடுகின்றார்.
அவரின் நிலை கண்டு இறங்கிய சிவனார், பிரம்மா, இந்திரரிடம், சாபம் அளித்தது எவரோ அவரே அதன் நிலையை மாற்ற இயலும் என்று கூறி பிரிகுவை நினைக்கிறார். பிருகு அங்கே வருகிறார். அவரிடம் விஷ்ணுவானவர் உம்மைப்போல ஒரு அத்தியந்த சிவபக்தராவார். அவருக்கு இவ்வாறு சாபம் அளித்தால் பரிபாலனம் பாதிக்கப்படும் எனவே உன் சாபத்தின் தன்மையை மாற்றி அவருக்கு பத்து ஜன்மங்களும் அவற்றில் ஒரு ஜன்மத்தில் பத்தினியை இழக்கும் நிலையம் தந்து மன்னிக்குமாறு பிருகு முனிவரை சிவனார் பணிக்க, அவ்வாறே பிருகுவும் ஒப்புக்கொள்கிறார். இவ்வாறே தசாவதாரமும் நடைபெறும் என்றும் அதில் ஒவ்வொரு ருத்திரரும் அவருக்கு காலனாகவோ அல்லது காவலாகவோ அவரின் அவதார நோக்கத்தினை முடித்து வைப்பார் என்றும் அருளுகிறார் என்று ஸ்கந்த புராணம் கூறுகிறது.
அவ்வாறே மச்ச, கூர்ம, வராஹ, நரசிம்ஹ,வாமன, அவதாரங்களில் சிக்ஷையும்,
பரசுராம, ராம, பலராம, கிருஷ்ண கல்கி அவதாரங்களில் ரக்ஷையும் அளித்து சிவசம்புவான பரமேஸ்வரர் அவரை ஆட்கொள்கிறார் என்கிறது. அது என்னே சிக்ஷை என்ன ரட்சை என்று தொடர்ந்து பார்ப்போம்.

தசாவதாரம் - ஸ்கந்த புராண விளக்கமும் - 4
========================================
பிருகு முனிவரன் சாபமும் மச்ச கூர்ம வராஹ அவதாரமும்.
சோமகன் என்னும் அரக்கன் வேதங்களையும் அதன் ரகசியங்களையும் ஒளித்து விடவே அதனால் பிரளையம் ஏற்ப்பட துவங்கியது. அகால பிரளையதிளிருந்து மனுவையும் மற்றைய உயிர்களையும் காக்க விஷ்ணு மச்ச அவதாரம் எடுத்து அவர்களை காத்தார். பின்னர் அவனுடன் போரிட்டு அவனை விழுங்கி விட்டார். அதன் குணத்தால் அவரே கடலை கடைந்து உலகை அழிக்க ஆரம்பித்து விட்டார். இந்நிலையினை உணர்ந்த சம்பு, மகா சாஸ்தாவினை நினைத்தார். உடனே சாஸ்தா அழகான செம்படவன் உருக்கொண்டு அந்த மச்சத்தினை வலை வீசி பிடித்து அதன் கண்களை தொண்டிவிட்டார். தன் உடலை உகுத்து நல்ல முறையே விடுதலை அடைந்த விஷ்ணு சம்புவினையும் சாஸ்தாவினையும் தொழுது விஷ்ணு "ஹே பிரபு! இந்த மச்ச ரூபதினை வணங்கும் எல்லோருக்கும் வேண்டிய வரங்களை அளிக்க வேண்டும் என்றும் கோரினார்.மேலும் தன் அகங்காரத்தினை அடக்கியதை உணர்த்துமாறு அந்த கண் மணிகளை தம்முடைய முண்டக மாலையில் அணிந்துகொள்ளுமாறு கூறினார். சம்புவும் ஆனந்தமாக அதை ஏற்றுக்கொண்டார்.   


பாற்கடலை கடைய தேவ அசுரர்கள் முயன்ற மந்திர மலையினை மத்தாக செய்து அதனை கடலில் போட்டனர். ஆதாரமில்லாது அது அமிழ்ந்து போகவே உடனே விஷ்ணு மந்திர மலையினை தாங்க கூர்ம அவதாரம் எடுத்து அதனை தாங்கினார். ஆயினும் அமிர்தம் வராது விஷம் பரவவே அதன் நச்சினால் அனைவரும் மாண்டனர். பின்னர் அத்தனை வீரியமுள்ள நஞ்சினை ஒரே மிடற்றில் சிவனார் விழுங்கிவிட உமையோ அது உடலில் இறங்கி விட்டால் அண்டமே அழியும் என்று அஞ்சி அதனை கண்டத்தில் பிடித்து விட்டாள். விஷத்தினை ஏந்தியதால் விஷ்ணுவின் உடல் நீலமானது. நீலகண்டர் உடனே அனைவரையும் தம்மருளால் உயிர்பிக்க, மீண்டும் அமிர்தம் கடையபெற்று வெளிவந்தது. மமதை அடைந்து கூர்மம் கடலை கலக்க ஆரம்பித்தது.விபரீதத்தினை உணர்ந்த சம்புவானவர் உடனே விக்னேஸ்வறரை நினைத்தார்.கணபதியானவர் தன் தும்பிக்கையினால் அனைவரும் பார்த்துக்கொண்டிருக்கும்போதே அதனை அடக்கி மல்லாத்தி போட்டு நன்றாக துகைத்து அதனுடைய ஓட்டினை பிளந்தார். உடனே விஷ்ணு தன் அவதார நோக்கினை முடித்தார். கணேசனையும் சிவனாரையும் பலவாறு தொழவே,நடுநாயகமாய் இந்த ஓட்டினை தம்முடைய முண்ட மாலையில் பதக்கமாக அமைத்து கொண்டு இதை காணும் பொது எம்முடைய அகந்த அழிந்து விட வேண்டும் என்று வேண்டினார். அந்த ஓட்டினை பதக்கமாக கொண்டு சிவனார் முண்ட மாலையில் கொர்த்துகொண்டார்.
 
ஹிரண்யாக்ஷன் என்ற அசுரன் தன் பராக்கிரமத்தினால் தேவர்களையும் இந்த உலகையும் பெரும் துன்பத்தில் ஆழ்த்தினான்.இதனால் தேவர்களை ரட்சிக்கும் பொருட்டு பிரம்மாவின் மூக்கின் நுனியிலிருந்து ஏவப்பட்டு மிகுந்த பறக்கிரமத்துடனும் பலத்துடனும் வெளிப்பட்ட அவதாரம் பன்றியுறிவாய் அமைந்த வராஹ அவதாரம். தேவர்களையும் சமுத்திரத்தினுள் அமிழ்ந்துவிட்ட பூமியையும் மேல் கொண்டுவந்து அதை தடுத்த ஹிரண்யாக்ஷனையும் கடூர போர் புரிந்து அனாயாசமாய் கொன்று, ஜெகத்தினை கத்தார் ஜகன்னாதன். ஆனால் அவனை கொள்வதற்கு ஏற்பட்ட கோபத்தினையும் உக்கிரத்தினையும் அடக்க இயலாமல் தவித்து மீண்டும் அவரே ஏழு கடலையும் கலக்கி மலைகளை பொடித்து தம் உக்கிரத்தினை வெளிக்காட்டவே பயந்து நடுங்கிய பிரம்மனும் தேவர்களும் மறையோர்களும் சம்புவினை நினைக்கவே அவர் கார்த்திகேயனை அனுப்பி விஷ்ணுவின் உக்கிரத்தினை அடக்க சொன்னார். குமரனும் அப்பெருமலை போல உள்ள பன்றியை தம் இருகரங்களால் அதன் தித்தி பல்லினை பிடித்து கரகரவென்று இழத்து வந்து மோதி அதனை சம்ஹாரம் செய்து அதன் வெற்றியை குறிக்கும் விதமாக அதன் தித்தி பர்க்களை பிடுங்கி சம்புவின் பாதத்தில் சமர்ப்பிக்கவே அவர் அதனை பிறையின் மேல் இன்னொரு பிறையாகவும் தம் கொண்டையில் சொருகி அதனை ஒரு ஆபரணமாக அணிந்து கொண்டார். பின் சந்தோஷமாக குமரனை போற்றும் வகையாக அவரை தம் மடியில் வைத்து கொண்டு விளையாட தொடங்கினார். இதை பார்த்து அனைவரும் தேவர்களும் பிரம்மாவும் மறையோர்களும் போற்றி புகழ்ந்து வணங்கினர். சாபம் நீங்கிய விஷ்ணுவும் தம்முருவம் எடுத்து தமக்கு விடுதலை வழங்கிய குமரனையும் சம்புவையும் வணங்கி ஆனந்தமாக தம் இருப்பிடம் சென்றார்.
 
தசாவதாரம் - ஸ்கந்த புராண விளக்கமும் - 5
========================================
சிங்க தோலும் வாமனரின் முதுகெலும்பும்
தன் சகோதரனின் கொடூர முடிவிற்கு பழி தீர்க்க முடிவெடுத்தான் ஹிரனிகசிபு. கோர தவத்தில் இறங்கி மரணிமில்லா வரத்தினை பெற பிரம்மனை தொழுதான். தவாகினி சுடவே இந்திரனோ அவன் மனைவி லீலாவதியின் கற்பதினை சிதைக்க அதன் மூலம் ஹிரனியனின் குலம் நசிக்க திட்டம் தீட்டி அவளை பலவந்தமாய் கடத்தி போக, வழியில் நாரதரால் தடுத்தாட்கொள்ள பட்டு அவர் ஆசிரமத்தில் தஞ்சம் அடைந்து கருவிலேயே திருவாய் பிரஹலாதன் வளர்த்தார் நாரதர். பிரஹலாதன் பிறக்குங்கால் பிரம்மன் ஹிரண்யனுக்கு கட்சி தந்து அவன் தவத்தினை மெச்சி மரணம் தமேக்கே உண்டு எனில் ஹிரன்ய நீ அதை இச்சிப்பது தகாது, இனாலும் அந்த வரமளிக்க முடியாது என்று மறுக்க ஹிரண்யன் சலம், அசலம், ஆயுதம் இல்லாமலோ ஆயுதம் கொண்டு, மனிதனோ, மிருகமோ, பட்சியோ, ஜலவாசியோ, கலையோ மலையோ இரவோ பகலோ, தேவர்கள், அசுரர்கள், மனிதர்கள், கல், மண் முதலிய எவராலும் தன்னை அழிக்க கூடாது என்று அறிப்பூர்வமாய் வரம் கேட்டதை நினைந்து வரம் கேட்க ததாஸ்து என்று சொல்லி மறைந்தார் பிரம்மா.
வரம் வாங்கிய மமதையில் அட்டூழியங்கள் பல செய்தான், ஓம் ஹிரண்யாய நமஹ என்று சொல்ல சொல்லி அனைவரையும் இம்சித்தான், பாதாளம் முதல் மேரு வரை அவன் ஆட்சி கொடிகட்டி பறந்தது. அவிசிலாமல் தேவர் இளைத்தனர். சிறையில் தவித்தனர். ஒருவனுக்கு எதிரியை உள்ளுக்குள்ளேயே வைக்கிறார் கடவுள். பிரஹலாதன் வளர்ந்தான், வளர வளர அவனுக்குள்ளே நாரதர் வித்திட்ட நாராயண பக்தி வேர் விட்டு தழைத்து வளர்ந்தது ஹரிதாசனை ஹரி வைரி வெறுத்தான். புழுவென துடித்தான். அவனை மாற்ற தலைகீழாய் முயன்றான் எதுவும் பலிக்கவில்லை. உயிருக்கு துன்பம் எர்ப்படினும் அவன் ஹரி பக்தியை விட காணோம். கடைசீயில் மாலை பிரதோஷம் வந்தது. ஹிரனியன் கர்ஜித்தான், பிரஹலாதனை இட்டு வந்து எங்கே ஹரி என்றான் உன்னுள்ளே ஹரியை வைத்து ஊர் ஊராய் தேடுவது மதியீனம் அப்பா என்று மன்றாடினான். விதி வலியது. இங்கு இந்த தூணிலும் இருப்பானா உன் ஹரி என்று ஏளனம் செய்தான் ஆம் கடவுள் புல் பூண்டிலும் உண்டானால் இந்த தூணிலும் இருப்பான் என்றான் பிரஹலாதன். தூணை பிளந்தான் அசுரன். நரசிங்கன் ரௌதிரகாரமாய் கர்ஜித்து ஹிரநியனின் கேட்டுகொண்டதன்படி அவனை பிர்ப்பகலுக்கு பின்னும் மாலைக்கு முன்னர், வாயில் படியில் வைத்து தன் தொடைமேல் கிடத்தி நகங்களால் அவன் வயிற்றை கிழித்து, இரத்தத்தினை குடித்து அவனை சம்ஹாரம் செய்தார். இந்த கோர யுத்தத்தின் ரௌத்திரகாரம் மெல்ல விஷ்ணுவை ஆக்கிரமிக்க, கொடியவனின் ரத்தத்தினை குடித்ததன் பலன் நரசிங்கம் உலகை அழிக்க தொடங்கவே அங்கு சம்புவானவர் பிரம்ம முதலிய தேவர்கள், மற்றும் ரிஷியினரின் வேண்டுகோளுக்கு இணங்க தன் அம்சமான வீரபத்திரரை நினைத்தார். உடனே அவரை அடக்க அவரை விட வலியதான சரப பட்சியின் வடிவினை எடுத்து நரசிங்கத்தினை விட பயங்கரமாக ஹுங்காரம் செய்துகொண்டு ஓரிரு நாழிகையில் அவரை சம்ஹாரம் செய்து அவருடைய தோலினை சட்டை போல் நீக்கி சம்புவின் வஸ்திரமாக சமர்பித்தார்.காமேஸ்வரரும் அதை ஆனந்தமாக தம் இடையில் உடுத்திக்கொண்டு அந்த சிங்கத்தின் தலையினை இடையில் சூடிக்கொண்டு ஆனந்த கூத்தாடினார். தம் சாபம் நீங்கியதன் பலனாக மகிழ்ந்த விஷ்ணு, பிரம்மா முதலிய தேவர்கள் அனைவரும் மகிழ்ந்து தேவதேவா! எம் பாபங்களை போக்கும் இறைவ, விஷ்ணுவின் இந்த நரசிங்கத்தின் தோலினை எப்போதும் தம்மிடையில் உடுத்தி கொண்டு அவர் எப்போதெல்லாம் இதனை பார்க்கிறாரோ, அப்போதெல்லாம் அவருக்கு நிறைந்த பக்தியும், அகங்காரதினை களைந்து ஈஸ்வர பக்தியினை சித்திக்க வேண்டும் என்று கோரினர். தேவதேவரும் அவ்வாறே ஆகுக என்று கூறி தத்தம் இடத்திற்கு அனுப்பி வைத்தார்.
தன் வலிமையினை உலகிற்கு உணர்த்த மகாபலி அகண்ட யாகத்தினை செய்தான். அதனை ஒழிக்க தேவர்களின் வேண்டுகோளை ஏற்று காசிபரின் மகனாக வாமனராய் பிறந்து அவன் யாகசாலைக்கு சென்றார். அவனிடம் தானம் கேட்க்கும் முகமாக அவனிடம் மூன்றடி மண் கேட்டார். கொடுக்க சம்மதம் என்று கூறியவுடன் விநிர்க்கும் மண்ணிற்கும் திரிவிக்ரமமாக ஓங்கி உலகளந்தார். மூன்றாவது அடியை எங்கே என்று கேட்க மகாபலியும் தன தாத்தனுக்கு ஆண்டாவன் என்று உணர்ந்து மூன்றாம் அடிக்கு தன் தலையே உள்ளதென சரணடைந்தான். அவனை பாதாளத்திற்கு தள்ளி அண்டம் வெடிக்குமாறு ஓங்கி வளர துவங்கினார் விஷ்ணு. இந்நிலையை உணர்ந்த சம்புவோ தம் அம்சமான பைரவரை அழைத்து இந்த திரிவிக்கிரமதினை அடக்குமாறு பணித்தார். உடனே பெரும் கோபத்துடன் பைரவர் திரிவிக்கிரமரை ரைந்து தள்ளி மேன்மையானதும் கருநிறமான அவரது தொலை உரித்து அதனை கவசமாக அணிந்து கொண்டார். வெகு நீளமான கங்காலமேனும் அவர் முதுகெலும்பை தன கையில் தரித்து கொண்டார். விஷ்ணுவும் உடனே அவர் உருவத்தினை ஏந்தி உமையோடு கூடிய சிவனாரை தொழுது தம் பாபங்களை எல்லாம் விட்டு விடுபட்டார். இப்படி ஐந்து அவதாரங்களில் சிக்ஷையினை அளித்து சாம்ப பரமேஸ்வரர் அவருக்கு அவதார முக்தியினை கொடுத்தார்.
     


தசாவதாரம் - ஸ்கந்த புராண விளக்கமும் - 5
========================================
பரசுராமர் அவதாரரமும் பிருந்தையின் சாபமும்.
 ஒவ்வொரு மனிதனும் எடுத்தவுடன் சான்றோன் ஆகிவிடுவதில்லை. அவன் பண்பட எத்தனையொமுன்னர் படி நிலைகளை தாண்டி வர வேண்டியுள்ளது. இதுவே அவதார தத்துவம்.
முன்னர் சொன்ன 5 அவதாரங்களிலும் விஷ்ணு அவர் நிலையில் இல்லாமல் இருந்ததினாலோ என்னவோ பரமேஸ்வரன் அவரை சிட்சித்து ரட்சிக்க வேண்டியது இருந்தது போலும். இனி வரும் அவதாரங்களில் எப்படி ரக்ஷிக்கின்றார் என்று பார்ப்போம்.
பிருகு முனிவரின் சாபத்தினால் 10 அவதாரங்களின் சுழலில் மாட்டிக்கொண்ட விஷ்ணுவிற்கு பரசுராம அவதாரம் 5 வது அவதாரம். ஜமதக்னி முனிவர் மற்றும் அவர் பத்தினி ரேணுகா தேவி க்கும் பிறக்கின்றார் விஷ்ணு அவருக்கு ராமன் என்று பெயரிட்டு வளர்க்கின்றனர். அவருக்கு பணிவிடைகள் பல செய்து தந்தைக்கு சிறந்த தனையன் எப்படி இருக்க வேண்டும் என்ற உதாரண பிருஷனாக இருக்கின்றார். ஒரு முறை தன் தவத்திற்கு பங்கம் வந்ததை அடுத்து அதற்க்கு காரணமாக தன பத்தினியையும் அதை மறுக்கும் மற்ற குமாரர்களையும் சம்ஹரிக்க ஜமதக்னி உத்தரவிடுகின்றார். மறுபேச்சில்லாமல் அத்துணை பேரையும் தலையினை கொய்து விட்டு தன தந்தை முன் நின்றார். மிகுந்த கொபிஷ்டரான ஜமதக்னி இதை கண்டு மனம் மகிழ்ந்து வேண்டிய வரங்களை கேட்க தூண்டவே. ராமனும் தன்னால் வெட்டுண்ட அன்னையும் அண்ணன்மாரும் மீண்டும் உயிர்பிழைக்க வேண்டும் எனவும், ஜமதக்னி தம் கோபத்தினை அறவே விட்டு விட வேண்டும் எனவும் தமக்கு சிவபூஜையில் மிகுந்த ஈடுபாடு வர வேண்டும் எனவும் வரம் கேட்கவே, அவ்வாறே ஜமதக்னி வரம் அளித்து விட்டு சிவா பூஜையின் முறைகளை உபதேசிக்க அவரும் மகிழ்ந்தது சிவபூஜை புரிய வனத்திற்கு சென்று விடுகிறார். இந்நிலையில் க்ரிதவீர்யர்ஜுனன் குமரன் கார்த்தவீர்யார்ஜுனன் கோவத்தை விட்ட ஜமதக்நியிடம் காமதேனுவை யாசிக்க அவர் மறுத்து விடுகிறார். இரவில் அவர் ஆசிரமம் புகுந்து அவரின் தலையினை வெட்டி கொன்று காமதேனுவை களவாடி செல்லவே, இதனை அறிந்த ரேணுகை ஜமதக்நியுடன் சேர்ந்து உடன் கட்டை ஏறிவிடுகிறார். ஆனால் கடும் மழையினால் அவள் உடல் புண்ணாகி ஆடைகள் எரிந்து அதனை மறைக்க வேப்பிலையால் மூடி கொண்டு வனத்திற்கு புகவே அங்கு பொத்தான் மாதங்கி என்ற தம்பதிகளிடம் அடைக்கலம் அளிக்கின்றார்கள். இந்த செய்தி ராமனுக்கு எட்டிவிடவே, கோபம் அடைந்த ராமன் சிவனாரிடம் ஒரு கண்டரகொடரியை வரமாக வேண்டி மகிஷ்மதி பட்டினம் அடைகிறார். அங்கு கர்த்தவீர்யர்ஜுனனுடன் சேர்த்து 21 தலைமுறைகளின் க்ஷத்திரிய குலத்தினர் என்று அனைத்து அரசர்களையும் சம்ஹாரம் செய்துவிடுகிறார். அந்த ரத்தினை பிந்து சரஸ் என்ற குளத்தில் சேர்த்து தன் தந்தைக்கு ரத்தத்தினால் தர்ப்பணம் செய்து தன சபதத்தினை முடிக்கின்றார்.பின்னர் பரசெரியில் இருந்த தன தாய்க்கு பணிவிடைகள் செய்து அவளுக்கு முக்தி அளித்து, சிவா பக்தர்களை கொன்றதால் ஏற்பட்ட வீர ஹத்தியினை நீக்குவதற்கு சிவ பூஜைகள் பல செய்து தன் பராக்கிரமத்தால் சம்பாதித்த நிலங்களை எல்லாம் கஸ்யப முனிவருக்கு தத்தம் செய்துவிட்டு கேரளா தேசத்தில் இருந்து தன் அவதாரத்தினை முடித்து வைகுண்டம் சென்று விடுகிறார். இப்படி பரமேஸ்வரருக்கு முக்தி கொடுத்தது பரசுராம அவதாரம்.

பிருகு முனிவரின் பத்தினி பிரிவை அளிக்க வல்ல சாபம் மட்டும் அல்லாது ஜலந்தாசுரனின் பத்தினி ப்ருந்தையானவளின் சாபத்தினால் லக்ஷ்மியை பிரிய வேண்டி குரங்குகளின் தயவை நாடி இருக்க வேண்டிய நிலை விஷ்ணுவிற்கு ஏற்பட்டதே ராமாவதாரம்.
இனி ராமவதாரத்தின் கதையினை பார்க்கும் முன்னால் ஜலந்திரனின் கதை பற்றி பார்போம்.
இந்திரன் ஒருமுறை சிவனாரை தரிசனம் செய்ய செல்லுபொழுது அவனை சோதிக்க எண்ணிய சிவனார் ஒரு பூத கணாதிபதி போல உருமாறி கைலாயத்தின் வாயிலை காக்கிறார். அகங்காரத்தினால் மதியிழந்த இந்திரன் அவரை ஏளனம் செய்து அவரை காண அனுமதி வேண்டவே கோபம் கொண்ட சிவன் அவனுக்கு தம்முருவம் காட்டுகிறார். இந்திரன் அவரிடம் மன்னிப்புவேண்டவே தம் சினத்தினை களைந்து அதனை சமுத்திரத்தில் எறிகிறார் அது உடனே ஒரு குழந்தையாகி சமுத்திரத்தில் அழுதுகொண்டிருக்கவே அதனை எடுத்துக்கொண்டு தன் வீட்டிற்கு வருகிறான்.அப்போது தானாகவே பிரம்மா வருணன் வீட்டிற்கு வரவே அவரிடம் குழந்தையை காண்பிக்கிறான். அக்குழந்தையோ பிரம்மாவின் தாடியை பலமுள்ள தனது கரத்தினால் பிடித்து இழுக்கவே அதை பார்த்து பிரம்மா இவன் தேவர்கள் விஷ்ணு என்னையும் கூட ஜெயித்து விடுவான். எவ்வித சாபத்தாலும் சக்தியாலும் இந்த குழந்தை பீடிக்க படமாட்டாது. மகாபலமும் துஷ்ட்டதனமும் உள்ள இக்குழந்தை ஜலந்தரன் எனும் நாமத்துடன் அஷ்டதிக்கிர்க்கும் சென்று அனைத்து லோகங்களையும் அசுரரின் ராஜ்ஜியத்திற்கு ஆட்படுத்துவான் என்று சொல்லி தன்னகம் செல்கிறார். அதனை ஜலந்தரன் என்று பெயரிட்டு வளர்க்கிறார்.
சிறிது காலம் சென்ற பின்னர் வருணனிடமிருந்து சென்று அசுரர்களுடன் சேர்ந்தது அஷ்ட திக்கிற்கும் சென்று தன பலத்தால் தேவர்களின் வீடுகளை சூறையாடி அதனை அசுரர்களுக்கு கொடுத்து மயன் உதவியால் ஜலந்தரமேன்னும் நாட்டினை அமைத்து காலநேமி என்ற அசுரனின் புதல்வி பிருந்தையை மணந்துகொண்டு சுகமாய் வாழ்ந்துகொண்டிருக்கிறான். சில காலம் கழித்து தேவர்கள் மேரு மலையில் தஞ்சமடைந்திருப்பதை உணர்ந்து அவர்களை தேடி செல்கிறான். அங்கு தேவர்களுடன் காவலனாக விஷ்ணு அவர்களுடன் போர் செய்வதை பார்த்து உக்கிர போர் செய்து அவர்கள் அனைவரையும் ஜெயிக்கிறான். தேவர்கள் அனைவரும் கைலைக்கு சென்று விடவே பல்லாயிரம் வருடங்கள் போர் செய்ததால் களைப்படைந்த விஷ்ணு அவனிடம் மன்னிப்பு கேட்கவே அவரை விட்டு அதற்குமேல் கைலாயம் இருப்பதை எண்ணி மீண்டும் சேனையை திரட்டிக்கொண்டு போர் செய்ய கைலாயம் புறப்படுகிறான். பருந்தை இதை கண்டு அவனை தடுக்கவே அவளை பொருட்படுத்தாமல் போர் செய்ய புறப்படுகிறான். அப்போது தேவர்கள் அனைவரும் சம்புவை தரிசிக்க நந்தியிடம் அனுமதிபெற்று அப்புனித இடத்திற்கு சென்று சிவனாரை வணங்கி அவர்களின் கஷ்டங்களை சொல்லி துதிக்கின்றனர். அப்போது சிவனும் அவருடன் பிராம்மண வேடமிட்டு தண்டம் கமண்டலம் சகிதமாக குடை ஏந்தி அவனிடம் சென்று அவனிடம் வருகின்றார். அப்போது ஜலந்திரன் தன செண்டிகளுடன் அங்கு வருகின்றான். அவனுடைய சரித்திரத்தினை கேட்க்கும் சிவனார் அவன் இங்கு வந்த விவரத்தினையும் கேட்டறிகிறார். ஜலந்திரன் தேவர்களையும் விஷ்ணுவையும் ஜெயித்த மமதையால் சிவனாரையும் ஜெயிப்பேன் என்று சூளுரைக்கிறான் மேலும் தன பலத்தினை பற்றி பெருமை பேசுகிறான். சிவனாரும் சினம் குமுற நகைத்து விட்டு சிவனின் தெய்வீகம் அறியாதவனுக்கு பாடம் புகட்ட தன இடது கால் பேரு விரலால் ஒரு பெரிய சக்கரித்தினை வரையவே, அது ஒரு பெரிய சக்கர வடிவத்தினை அடைந்து நிற்கிறது. சம்பு உடனே ! புத்தி கேட்ட ஜலந்திரா சிவனின் அருளால் அமைந்த இந்த சக்கரத்தினை ஏந்தி உன் தலைக்குமேல் தொக்கி நிருத்துவாயானால் இந்த கைலாயத்தில் உள்ள சிவனை ஜெயிதார்போல என்று கூறுகிறார். உடனே மமதையால் ஜலந்திரன் அந்த சக்கரத்தினை ஏந்தி தூக்க முடியாமல் தன தலைமேல் தூக்கி நிறுத்தவே உடனே அது தீப்பிழம்பாய் எரிந்து ஜலந்திரனை இரு துண்டாக சிதைக்கிறது. அங்கேயே உடல் பிளந்து ஜலந்திரன் இறந்து போகவே சம்புவும் தன் நெற்றிக்கன்னினால் அங்குள்ள சமுத்திர அளவுள்ள அசுர சேனையையும் ஒரு நொடியில் பஸ்பமாக்கி விடுகிறார் பின்னர் தேவர்களும் விஷ்ணுவும் பிரம்மனும் அவரை அநேகம் முறை துதிக்கின்றனர். பின்னர் அவர்களை தத்தம் இடத்திற்கு அனும்ம்பி விட்டு சம்பு கைலாயம் சென்றுவிடுகிறார்.
இங்கு பதியினை பிரிந்த ப்ருந்தையோ அவன் இறந்த செய்தி அறியாது துக்கித்து கொண்டு இருக்கவே அவளை நினைத்து காம விகாரமாகி விஷ்ணு அவளை அடைய ரிஷி வடிவம் பெற்று தம் கணத்தினில் இருவரை சிங்கமாக்கி ப்ருந்தயினை நந்தவனத்தில் துரத்துமாறு ஏவுகிறார். பின்னர் அவளை காக்கும் பொருட்டு அவளின் அன்பினை அடைகிறார். ப்ருந்தையோ அவள் கணவனின் நிலை என்னானதோ என்று வினவுகிறாள் உடனே அந்த கணங்களை பார்த்து இறந்துவிட்ட ஜலந்திரனின் உடலை கிடத்தி வந்து பிருந்தையின் முன்னாள் போடா செய்கிறார்.அந்த கணங்கள் குரங்கு உருவாக மாறிக்கொண்டு ஜலந்திரனைன் உடலை எடுத்து வந்து அவள் முன் போடுகின்றன. கோரமான உடலை பார்த்து பயந்த பிருந்தையோ அந்த உடலின் மேல் விழுந்து அழுது புலம்புகிறாள். விஷ்ணுவோ, பிருந்தயிடம் தாம் ஜலன்திரனை உயிர்ப்பிபதாக சொல்லி அந்த உடலை ஒட்டி பின்னர் ரிஷியின் உடலை மறைத்துவிட்டு ஜலந்திரனின் உடலுள் புகுந்து விடவே கவலை நீங்கிய பிருந்தையுடன் ஆனந்தமாக கூடி விஷ்ணுவும் ஆவலுடன் உறவு கொள்கிறார். இப்படி போலி ஜலந்திரனாக பிருந்தையுடன் கூடி இருக்கவே ஒரு நாள் அவரையாமல் சுவாதீனமாக தன் சயன திருக்கோலத்தில் கிடந்துவிடவே அதை உணர்ந்த பிருந்தையோ இவர் தம் கணவரல்லாமல் மாயமாலம் செய்து தன கர்ப்பை சூறையாடிய விஷ்ணு ஆவர் என்று உணர்ந்து அவரை பார்த்து ஓர் விஷ்ணுவே! நீர் இப்படி குரங்குகளின் சிநேகத்துடன் பதிவிரதியான எம்முடைய கர்ப்பை வெட்கமின்றி சூரையாடிநீர்! ஆகவே உம்முடைய பத்தினியை இன்னொருவன் அபகரித்து போக கடவது நீரும் குரங்குகளுடன் சிநேகமாகவே இருந்து துன்பப்படக்கடவது. என்று சொல்லி அக்கினியுள் புகுந்து மாய்ந்து விடவே. இதை பார்த்து பிருந்தையின் பிரிவாற்றாமையால் தன்னிலை மறந்து அவளின் சாம்பலை பூசிக்கொண்டு அந்த சுடுகாட்டிலேயே விஷ்ணு தங்கி விடுகிறார்.

அவர் அவ்வாறே கண்ணீர் உகுத்து நெல்லி மரமானார். விஷ்ணுவின் இந்நிலை கண்ட பிரம்மாவும் மற்றைய தேவர்களும் வருந்தி கைலயங்கிரிக்கு சென்று பார்வதி பரமேஸ்வரரிடம் முறையிடுகின்றனர். கருணை கடல் உடனே கடைக்கனால் உமையை நோக்க அவள் தன நக கண்ணிலிருந்து ஒரு விதையினை உற்பத்தி செய்து பிரம்மனே வ்விதையை பூமியில் பயிரிட்டு அமிர்ததினை நீராக ஊற்றி வளர்பீராக இதிலிருந்து குறித்த நாளில் துளசி என்னும் பெயருடைய கன்னி உண்டாவாள் அவளை நெல்லி என்னும் மரமாக உள்ள விஷ்ணுவிற்கு பாணிக்ரகணம் செய்து வெய்யுங்கள் உடனே அவர் நிலை மாறி துளசியை மணம் புரிந்து உலகே க்ஷேமம் அடையும் என்று வாழ்த்தி அனுப்பினர். உடனே பிரம்மனும் அவ்வாறே செய்து துளசியினை உண்டாக்கி விஷ்ணுவிற்கு மணம் புரிய வைத்து தன்னிலை உண்டாக செய்தார். விஷ்ணுவும் அவளை பிருந்தை என்றே மதித்து இனி என்றும் துளசியை பிரியாமல் இருக்க அதனை தம் மார்போடு அணைத்திருக்க வேண்டும் என்று அச்செடியின் இலைகளை மாலையாக்கி கொண்டு தனக்கு இஷ்டமாய் அணிந்துகொண்டு இருந்து வரலானார். அவ்வாறே உலகிற்கு துளசி உண்டானது என்று ஸ்கந்த புராணம் கூறுகின்றது.

தசாவதாரம் - ஸ்கந்த புராண விளக்கமும் - 6
========================================
ராமர் பலராமர் கிருஷ்ணர் கல்கி!
தசரதன் மைந்தனாய் அயோதியபட்டினத்தில் கௌசலை மைந்தனாய் பிறந்து தன சிற்றன்னையின் மைந்தர்களான லக்ஷ்மணன், பரதன், சத்த்ருக்ணனின் தாதாவாக அலங்கரிதுகொண்டும் இருந்துவந்தான் ராமன். வசிஷ்டரிடம் அனைத்து விதமான கல்வியை கற்றும் விஸ்வாமித்திரரின் தூண்டுதலின் பேரில் தாடகையினை அழித்து, அங்கிருந்து மிதிலைக்கு சென்று ஜனகரின் பெண் சீதையினை சிவதனுசு ஒடித்து சுயம்வரத்தில் ஜெயித்து மணம் புரிந்தார். பின்னர் அயோத்திக்கு வந்த அவருக்கு தசரதன் இளவரசு பட்டாபிஷேகம் செய்ய முற்பட்டபின் கைகேயியால் 3 வரங்கள் வாங்க பெற்று சீதையுடனும் லக்ஷ்மனின் கூட 13 வருடம் வனவாசம் மேற்கொண்டார் குகனின் துணையால் கங்கையினை கடந்து தெற்க்கே செல்லும் பொது. தசரதன் புத்திர சோகத்தில் இறந்து போகவே பரதனிடம் நாட்டினை பொறுப்பில் விட்டு விட்டு, மேற்கொண்டு காட்டில் வாழ்ந்து வந்தார். அப்போது அங்கு வந்த சூர்ப்பனகையால் பெரும் குழப்பம் விளையவே, லக்ஷ்மணன் அவளை மூக்கறுத்து விரட்டினான். வஞ்சம் கொண்ட சூர்ப்பனகை இலங்கை அரசனான தன தமையன் இராவணனிடம் சீதையினை பற்றி கூறவே காமம் கொண்ட அவன் வஞ்சனையிளால் அவளை புஷ்பக விமானத்தில் கவர்ந்து சென்று,அதற்க்கு இடையூறாக வந்த ஜடாயுவை கொன்று இலங்கை அசோகவனத்தில் சிறை வைக்கின்றான்.
சீதையினை காணாது பிருகு முனிவரின் சாபத்தின் விளைவால் லக்ஷ்மணனும் ராமனும் தேடி அலைகின்றனர். அப்போது கிஷ்கிந்தைக்கு செல்லும் அவ்விருவரும், அனுமனை காண்கின்றனர். ருத்திர அம்சமான ஹனுமானின் துணையுடன் சுக்ரீவனிடம் பரிச்சயம் ஏற்பட்டு அவன் துன்பம் தீர வாலியை வீழ்த்தி சுக்ரீவனுக்கு பட்டம் கட்டி அரசனாக்கி, அவன் மூலம் சீதையினை கண்டு பிடிக்க ஆவன செய்கின்றார். ஹனுமனும் வான் வழியே தாவி அசகாய சூரத்தனம் செய்து அசோகவன சீதையினை கண்டு அவளிடம் தகவல் தெரிவித்து அவளை தேற்றி தைரியம் கூறி காத்திருக்குமாறு சொல்லி, இலங்கை வனத்தினை அழித்து,ராவணன் பிள்ளையினை கொன்று அவன் முன்னே தர்பாரில் வீர சாகசம் செய்து லங்காதகனம் செய்து கண்டேன் சீதையை என்று ராமனை தேற்றி யுத்தத்திற்கு ஏற்பாடு செய்தார் ஹனுமான். அப்போது இலங்கையில் தர்மத்தினை எடுத்து சொல்லி பின்விளைவுகளை போதித்து எச்சரிக்கை செய்த லங்கேசன் தம்பி விபீஷணன் அண்ணனால் அவமான படுத்தப்பட்டு நாட்டை விட்டு துரத்தப்பட, நிராதரவாய் வந்தவருக்கு அடைக்கலம் அளித்து ஹனுமனும் ராமனும் ஆதரவளித்தனர். பின் சமுத்திரத்தின் பாலம் அமைக்க முடியாமல் தவிக்கவே அகஸ்திய முனிவரின் துணையுடன் பரமேஸ்வரனை பூஜை செய்து பாசுபதாச்திரதினையும் கோதண்டதினையும் பெற்று செதுபண்தனம் அமைத்து யுத்தம் செய்ய மேற்கொண்டு கும்பன் நிகும்பன், கும்பகர்ணன், மற்றும் இந்திரஜித் ஆகியவர்களை அழித்து இறுதியில் இராவணனையும் அழித்து,ராமேஸ்வரம் சென்று தர்ப்பணங்கள் கொடுத்து சிவபக்தனும் பிராம்மணனும் ஆகிய அவனை கொன்றதால் ஏற்பட்ட பாவத்தினை சிவபூஜை செய்து பரிகாரம் முடித்து அயோத்திக்கு புஷ்பக விமானத்தில் திரும்பி நீண்ட காலம் அரசாண்டு இறுதியில் தம் மனைவியை ஒரு அபவாததினை களைய கர்ப்பவதி என்றும் கருணை காட்டாமல் தர்மத்தின் பொருட்டு அவளை தேசபிரஷ்டம் செய்துவிட, அங்கு சீதை லவ குசர்களை வால்மீகியின் ஆசிரமத்தில் ஈன்று எடுக்கிறாள்,சீதை பூதேவியிடம் அமிழ்ந்துவிட அந்த துன்பத்துடன் அதிக காலம் வாழ்ந்தது பின் பின்னர் லவ குசர்களுக்கு ராஜ்ஜியதினை ஒப்படைத்து விட்டு சரயு நதியில் மூழ்கி தம் உடலை உகுத்து மீண்டும் வைகுண்டம் சென்று பரமேஸ்வரரிடம் நமஸ்கரித்து ராம அவதாரத்தினை முடிக்கின்றார் விஷ்ணு.
த்வாபர யுகத்தில் விஷ்ணுவானவர் வசுதேவர் ரோஹினியின் மைந்தனாக மதுராவில் பலராமன் என்ற பெயருடன் பிறந்து கிருஷ்ணாவதாரதிர்க்கு துணையாக கோகுலத்தில் இருந்து கொண்டு அனேக ராக்ஷச கூட்டங்களை கொன்று பல வீர சாகசங்களை புரிந்து இறுதியாக கம்ச வதத்திற்கு துணையாக இருந்து த்வாரகைக்கு அரசனாக இருந்து கொண்டு பரமேஸ்வரனிடம் பூஜா பலன்களால் யோக மர்கத்தினை கைக்கொண்டு இறுதியில் முக்தியடைந்தார்.
   
விஷ்ணு, கிருஷ்ணாவதாரத்தில் வசுதேவருக்கும் தேவகிக்கும் மகனாக மதுராவில் பிறந்து அவன் மாமனான கம்சனுக்கு அஞ்சி வசுதேவரால் கோகுலத்தில் நந்தகோபர் யசோதையின் பிள்ளையாக வளர்க்கப்பட்டு பூதனை,திருணாவர்த்தன், சகடாசுரன், முதலிய கம்சனால் அனுப்பபெற்ற அரக்கர்களை சம்ஹாரம் செய்து, காளிங்கனை சாய்த்து,பல பால லீலைகளை புரிந்து வெண்ணை உண்டு, கந்தர்வர்களுக்கு உரலால் மோட்சம் அளித்து, கோவர்தனதிடம் மக்களை பூஜை செய்வித்து இந்திரனின் கர்வம் அடக்கி, சிவசம்புவை வணங்கி உத்தங்க மாமுனிவரிடம் தீக்ஷை பெற்று சிறந்த சிவபூஜை செய்வித்து அவர் அருளால் மதுரா சென்று அங்கு கம்சனின் அநியாய ஆட்சியை முடிக்க அவனையும் சம்ஹாரம் செய்து அவன் மாமன் ஜராசந்தனின் தொல்லைகள் தீர த்வாரகையினை உண்டாக்கி அதில் அரசமைத்து, சிசிபாலனை அழித்து தன பத்தினியான லக்ஷ்மி, பூமி தேவிகளை முறையே ருக்மிணி, சத்தியபாமை என்று மணம்புரிந்து முடித்து தன் அத்தை குந்தி துயர் தீர அர்ஜுனனின் துணையுடன் இந்திரபிரஸ்தம் அமைத்து கௌரவர்களால் வஞ்சிக்க பெற்று அவமான படுத்தப்பட்ட பாண்டவர்களையும் தன் தங்கை திரௌபதியையும் காக்க அவர்களுடன் குருக்ஷேத்திரத்தில் யுத்தம் செய்வித்து கௌரவர்களையும் அவர் சார்ந்த பதினாயிரம் கோடி க்ஷத்ரிய குல சேனைகளையும் அழித்து இறுதியில் பீஷ்மர், விதுரர், கர்ணன், கௌரவர்கள், துரோணர், திருதிராஷ்ட்டிரன் முதலியவர்களுக்கு முக்தி அளித்து, பூபாரத்தினை குறைத்து தர்மத்தை அமைத்து இறுதியில் வைகுண்டம் செல்கின்றார். இவ்வாறு விஷ்ணு பலராமன் கிருஷ்ணராக அவதரித்து சிவசம்புவின் அருளால் ரக்ஷிக்கபெற்று வந்தார் விஷ்ணு என்று ஸ்கந்த புராணம் கூறுகிறது.
த்வாபர யுகம் முடிந்து அநீதிகள் அதிகரிக்கும் கலியுகத்தில் அறியாமை இருள் கவ்வி கிடக்கும் கால் அவதரிக்கும் துஷ்ட்ட பிரஜைகளை சம்ஹரிக்க ஹயகரீவராய் அவதரித்து லிங்க மூர்த்தியாக சம்புவை வேண்டி அத்துச்ட்டபிரஜைகளை அழித்துவிட்டு மீண்டும் வைகுண்டம் அடைகிறார். இவ்வாறு பரமேஸ்வரரால் தண்டிக்க பெற்று 5 அவதாரமும் பரமேஸ்வரரால் ரக்ஷிக்கபெற்ற 5 அவதாரங்களால் பிருகு முனிவரின் சாபத்திலிருந்து விடுலை பெற்றார். இவை அனைத்தும் அனேக கல்பங்களில் அனேக முனிவர்களால் அவ்வாறே வருணித்து சொல்ல படுவது. பறேமேஸ்வரர் விஷ்ணுவை தண்டிக்கும் சூத்சுமத்தினை விஷ்ணு புராணம் சொல்வதில், ஆயினும் விஷ்ணுவானவர் அவதார முடிவில் தன தேகத்தினை விட்ட மாதிரியிளிருந்தும், வேதங்கள் புராணங்கள் மூலமாகவும், அதில் கணபதி, சுப்பிரமணியர், சாஸ்தா, பைரவர், வீரபத்திரர், விஷ்ணுவிற்கு தரும் சிக்ஷை மூலமாகவும், மேலும் பரமேஸ்வரரின் அணிகலன்களில் உள்ள, மீனின் கண்கள், பிரம்ம கபாலம், ஆமையின் ஓடு, பன்றியின் தித்திப்பல், சிங்கத்தின் தோல்,நீண்ட முதிகலேம்பால் ஆன தண்டம் ஆகியவற்றை கொண்டு தெளிவாக ஊகிக்க முடிகிறது.
இனி தசாவதாரம் தவிர இன்ன பிற அவதாரங்களை எடுக்கும் முறையினை பார்ப்போம்.
தசாவதாரம் - ஸ்கந்த புராண விளக்கமும் - 7
========================================
விஷ்ணு கல்ப காலத்தில் வரும் பிரளையத்தில் சம்புவானவரிடம் பல வரங்களை வேண்டிகொல்வதனாலும் பல முனிவர்களின் சாபம் மூலமும் அவருக்கு பல அவதாரங்கள் அமைகின்றது.
இனி நாம் தசாவதாரம் அல்லது ஏனைய பிற அவதாரங்களை இங்கு காண்போம்
மோகினி, தன்வந்தரி, மூக சிவ முனிவர் அவதாரம்
--------------------------------------------------------------------------
திரிபுர சம்ஹரத்தில் விஷ்ணுவின் பங்கு- சிவ அம்சத்தினை
விஷ்ணு ஏற்றல் -நராகசுர வதம்
விஷ்ணு ஒருமுறை கந்தமான பர்வதத்தில் பல கொடிய தவங்கள் செய்து சிவசம்புவின் ஆசிபெற்று அவரிடம் பல வரங்களை பெறுகிறார். அவை " சம்புவே! தங்களுக்கு ஒரு முறை நான் தங்கள் வாகனமாகவும் வில்லாகவும் அம்பாகவும் அமைய அங்கீகரிக்க வேண்டும்." என்றார் அதுபோலவே திரிபுர சம்ஹாரத்தின் போது வில் அம்பாக மாறுகின்றார். மேலும் அவரே சிறந்த வெண்மையான ரிஷபமாக மாறுகின்றார்.அவர் மேல் ஆரோஹணித்து திரிபுரத்தினை சம்ஹாரம் செய்கின்றார் சாம்பமூர்த்தி.
மைனாக பர்வதத்தில் சம்புவினை வேண்டி "பூமிபுத்திரரரான நரகாசுரன் தாம் என்னோடு எப்போது சேர்ந்து அவனுடன் மொதுவோமோ அப்போதே தனக்கு மரணம் ஏற்பட வேண்டும் என்று பிரம்மாவிடம் வேண்டினான். அதலால் யெவராலும்அவனுடன் அழிக்க வொண்ணாத அவனுடன் நான் இருபத்தொரு முறை போர் செய்து தொற்று மதுராபட்டினத்தை விட்டு ராஜ்ஜியதினை மாற்றி விட்டேன். ஆகவே தாம் என்னுள் இருந்து அவனை சம்ஹரிக்க வேண்டும்" என்று கோரினார். அதனை பரமேஸ்வரனும் சம்மதிக்கவே சத்தியபாமாவுடன் நரகாசுரனுடன் போரிட்டு அக்கோர யுத்தத்தில் அரக்க செனையினை துவம்சம் செய்து சிவனை வேண்டியவுடன் அவர் கிருஷ்ணனின் வலபாகத்தில் புகுந்து தன் சக்தியினால் கிருஷ்ணருக்கு உதவவே அவரும் சுதர்சன காக்கரதினால் நரகாசுரனை வதைப்பதாகவும். மேலும் அவனை அழித்ததற்கு பிராயச்சித்தமாக கிருஷ்ணர் தில்லை அம்பலத்தில் சம்புவை வேண்டு அவரை தரிசித்து பின் தம்மிடம் செல்வதாக ஸ்கந்த புராணத்தில் வருகின்றது
மோகினி அவதாரம் -
மோகினி அவதாரம் ஸ்கந்த புராணத்தில் சிவசம்ஹித காண்டத்தில் பல இடங்களில் குறிக்க படுகிறது.அவ்வாறே ஒரு முறை திருவாலங்கட்டில் நாராயணர் கடும் தவம் இயற்றி உமையுடன் ரிஷபாரூடராக காட்சி தரும் சர்வேஸ்வரனை வேண்டி தாம் பெண்ணாக பிறந்து அவருடன் இன்புற்றிருக்க வேண்டும் என்று வேண்டினார். அவ்வாறே ஆகுக என்று உமையினை நோக்கி அதற்காக அருளுமாறு கூற உமையும் அவளின் அம்சத்தின் ஒரு பகுதியை விஷ்ணுவுக்குள் செலுத்துகிறாள். இதனால் விஷ்ணு நினைத்த போதெல்லாம் மோகினி அவதாரம் எடுக்கும் சக்தி கிட்டும் என்று அருளினார்.
முக்கியமாக தாருகா வனத்தில் ரிஷிகளின் மமதையை அடக்குவதற்காக சம்புவானவர் கோடி மன்மதர்களையும் மிஞ்சும் வகையில் தாம் நிர்வாண கோலத்துடன் பிக்ஷாடணராக வரும்போது அவரின் துணையாக வருமாறு விஷ்ணுவை நினைக்கின்றார் அவரும் கோடி அழகிகளின் அம்சமும் காமத்தின் அம்சமும்மான சர்வ லக்ஷனமுள்ள மோகினியாக அவதரிக்கின்றார். கண்டவர் கலங்கி பயித்தியம் பிடிக்க வைக்கும் அழகுடன் வரும் அவளை ரிஷிகள் அனைவரும் கண்டு மோகித்து அவர்கள் யாகங்களையும் மறந்து அவளை அடைய மார்க்கம் தேடவே அவர்கள் மேற்கொள்ளும் நித்திய கர்மங்கள் மறந்து அவள் பின்னே செல்கின்றனர், பிட்சாடனரை கண்ட யோகிநிகளோ, அவர் மேல் மோகித்து கர்ப்பவதிகளாகி பிள்ளை ஈன்று அப்பிள்ளைகள் பூதகணங்கள் ஆகின்றன. இப்படி சிவனிடம் மயங்கி பின் தண்ணினால் உணர்ந்த யோகிகள் அபிசார மந்திரங்கள் இட்டு மான் மழு, தீ, சூலம், கபாலம் என்று ஏவ அது அவருடைய அணிகலங்கலாகிவிட இறுதில் அவர்கள் பிட்சாடனரிடம் அடைக்கலம் அடைக்ன்றனர்.
தன்வந்திரி அவதாரம் -
பார்க்கடல் கடைவதில் பல சூட்சுமங்கள் ஸ்கந்த புராணம் கூறுகிறது. கேதாரத்தில் சிவா பூஜை செய்யும் துர்வாச மகரிஷியினை சந்தித்து அவர் ஆசி பெறுகிறார் விஷ்ணு அப்போது அவர் வணங்கும் கேதாரீஸ்வறரை வணங்காமல் போகவே சினம் கொண்ட துர்வாசர் "ஹே விஷ்ணுவே! அகம்பாவத்தால் நீ கேதாரீசறை வணங்காமல் சென்றதால் உம் கருடன் இறக்க கடவது, உன் பத்தினி கடலில் விழக்கடவது உம் ரத்தத்தினை இழந்து நீ இறக்ககடவது!" என்று சபித்தார் அந்த சாபத்தினால் லக்ஷ்மி பார்க்கடளுக்குள் சென்றுவிட்டாள் கருடனும் இறந்து போகவே வைகுண்டதினை இழக்கும் விஷ்ணு அதனை மீட்டெடுக்க மந்திர மலையினை மத்தாக இட்டு வாசுகியை கயிறாகி கூர்மாவதாரம் எடுத்து அதனை தாங்கி அதன் மூலம் ஐராவதம், காமதேனு, பல கோள்கள், கர்ப்பக விருட்சம், ஆகியவைகளுடன் லக்ஷ்மியும் அதன் பின்னர் அமிர்த கலசதினை ஏந்தி பார்க்கடலில் இருந்து அமிர்ததினையும் தன்வந்திரி உருவுடன் மீட்டெடுத்து வருகின்றார் விஷ்ணு. அவர்தான் சிவசம்புவின் ஆணையுடன் பல நோய்களுக்கு மருந்தாகவும் இருக்க பணிக்கின்றார். பார்க்கடலை கடைந்த பின் அந்த அமிர்ததினை கவரும் அசுரர்களை ஏமாற்றி அதன மீட்க சம்புவின் ஆணைப்படி மீண்டும் மோகினி அவதாரமெடுத்து அவர்களிடமிருந்து அமிர்ததினை மீட்கின்றார். பின் சுந்தரேசனும் மோகினியும் கலந்து தர்ம சாஸ்தா அவதரிக்கின்றார். அவரை தம் கணாதிபதியாக்குகின்றார் சிவசம்பு.
மேலும் கச்யபரின் புதல்வனாக மீண்டும் கருடன் பிறந்து அமிர்ததினை கவர்ந்து அவற்றை நாகர்களிடமிருந்து மீட்டு அவருடன் பல காலம் போரிட்டு பின் அவருக்கு வாகனமாகின்றார். அண்ணாமலையில் பிரம்ம கபாலதினை கிள்ளி எரியும் பைரவர் பிக்ஷை ஏந்தியதால் விஷ்ணு அவர்தம் நெற்றியை பிளந்து தன் உடலில் உள்ள குருதியை தானம் அளித்து இறந்து மீண்டும் அவர் அருளாலேயே சாபவிமோசனம் அடைகின்றார் என்று ஸ்கந்த புராணம் கூறுகிறது.
விஷ்ணு சுதர்சனதைனை அடைதல்
ததீசி முனிவர் பெரும் ஞானி. தலை சிறந்த சிவ யோகி. அவருக்கும் க்ஷூபன் என்ற விஷ்ணு பக்தனுக்கும் ஒரு தர்க்கம் ஏற்படுகிறது. அவன் க்ஷத்திரிய அரசன் ஆகவே பிராம்மணரான ததீசி முனிவரை அவர் தர்க்கம் செய்து அண்டி பிழைப்பு நடத்தும் பிராம்மணர்களை காட்டிலும் அரச வம்சனான க்ஷத்ரிய வம்சமே சிறந்தது என்று வாதாடுகிறான். அதை ததீசி முனிவர் எதிர்க்கின்றார். நிலைமை இவ்வாறு இருக்கவே க்ஷூபன் விஷ்ணுவை நினைத்து அவரின் மூலம் ததீசியை வெல்ல அழைக்கின்றார். விஷ்ணுவிடம் நிலைமையினை கூறுகிறான். உடனே விஷ்ணுவும் ஒரு அந்தணர் வேடமிட்டு ததீசியிடம் சென்று க்ஷத்திரியரிடம் உள்ள மகத்துவத்தை கூறி தந்திரமாக அக்கூற்றுக்கு ததீசியை ஆதரிக்குமாறு முயல்கின்றார். இதை உணர்ந்த ததீசி விஷ்ணுவின் உண்மை சொரூபத்தினை தெரிந்து அவரை கண்டிக்கின்றார். கோபம் கொண்ட விஷ்நோவோ அவரை எதிர்த்து போர் செய்ய, பலவகையான அஸ்திரங்களை ஏவி தாக்குகின்றார். அவைகளை ததீசி சிவமந்திரம் ஜெபித்து தர்ப்பையால் செய்த முப்புரி சூலத்தில் அடக்கி விடுகிறார். விஷ்ணு விஸ்வரூபதஹி காட்டி அவரை பயமுறுத்துகின்றார். ததீசியோ அவரைகாட்டிலும் பேரு உருக்கொண்டு அந்த விஸ்வரூபதினை அடக்கி விடுகின்றார். உடனே அவர் தம் சக்கரயுததினை ஏவ சிவா மந்திரம் சபித்ததால் வஜ்ஜிரம் போல மாறிவிட்ட அவர் மார்பில் அது பட்டு தீப்பொறி கக்கி முனை மழுங்கி பயனற்று போய் விடுகிறது. உடனே பிரம்ம அங்கு வந்து இருவரையும் சமாதானபடுத்தி சிவாராதனை செய்யும் யோகியை பழிப்பதோ போரிடுவதோ வீண் முயற்சி என்று தெளிவித்து விஷ்ணுவிற்கு உணர்த்தவே, உடனே அவரும் மன்னித்து விடுமாறு சொல்கின்றார். உடனே ததீசியும் கோபம் அற்றவராக அவரை விட்டு விடுகின்றார். க்ஷுபனும் அவன் வாதத்தில் தோற்றவனாக மன்னிப்பு வேண்டுகின்றான்.
இது இவ்வாறு இருக்க, ஒருமுறை தேவர்களை அசுரேந்திரன் போர் செய்ய அழைக்க அவர்கள் அனைவரும் அவனிடம் தோற்று விஷ்ணுலோகத்தில் சென்று விஷ்ணுவை சரனைகின்றனர். விஷ்ணுவோ ததீசியிடம் போர் செய்து தோற்ற என்னிடம் சக்கரமோ, அல்லது திவ்ய அச்திரன்களோ இல்லை, நான் இனி எவ்வாறு அசுரர் கூட்டத்தை எதிர்ப்பேன் என்று வருந்துகிறார். பிரம்ம அதற்க்கு, தேவ! நீர் சிறிதும் கலக்கமின்றி அந்த சிவசம்புவை நினைத்து கடும் தியானம் இயற்ற வேண்டும், அவருக்கு செய்யும் பூஜைகளால் அவர் மகிழ்ந்து நீங்கள் இழந்த அச்த்திரங்களை தமக்கு பிரசாதிப்பார் என்று அறிவுரை கூறவே, உடனே அவரும் சோம்பலின்றி பன்னெடுங்காலம் தவம் இயற்றி ஆயிரம் கமலங்களை அவருக்கு செலுத்தினார் திருவீழிமிழலை ஸ்தலதில் இவ்வாறு இருக்க ஒரு முறை தன் பூஜையில் இரு மலர்கள் இல்லாது போகவே அவர் கண்களை பிடுங்கி மலர்களாக அர்ச்சித்தார். உடனே சிவசம்பு அவர் முன்னரே வந்து உம் தவத்திற்கு நாம் இறங்கினோம். என்ன வரம் வேண்டும் சீக்கிரம் கேளும் என்று அவர் தம் நயனங்களை திரும்ப தந்து கூறினார். தேவ தேவ! இங்கு முன்னர் நீர் ஜலந்திரனை அழிக்க உண்டாக்கிய சக்கரத்தினை எமக்கு தந்து அருள வேண்டும் , மேலும் என்னை அனைவரும் கமலாக்ஷன் என்று அழைக்க வேண்டும், ததீசியிடம் அடங்கிய அஸ்த்திரம் அனைத்தும் எனக்கு தந்தருள வேண்டும், எம்மை வணங்கும் பக்தர்களுக்கும் நீர் அருள்புரிய வேண்டும் என்று வேண்டினார். அவ்வாறே ஆகுக என்று விஷ்ணுவிற்கு சுதர்சனதினையும் விஷ்ணு தனுசையும் மேலும் நராயனாச்திரதினை உருவாக்கும் சக்தியையும் அருளுகிறார் என்று ஸ்கந்த புராணம் கூறுகிறது.
மூக சிவ முனிவர் -வள்ளி ஜனனம்
ஒரு முறை வைகுண்டத்திற்கு உபேந்திரன் விஷ்ணுவை தரிசிக்க வருகின்றான். அப்போது கச்யப முனிவரின் புத்திரரும் மிக சிறந்த சிவ யோகியான கன்வ முனிவர் அங்கு விஷ்ணுவிடம் பேச விருப்பமுள்ளவராக அங்கு வருகின்றார். ஆனால் அவ்விருவரும் அவரை கொண்டு பார்க்கவும் இல்லை, அவருக்கு ஆசனம் கொடுக்கவுமில்லை அவருடன் பெசவுமில்லாது மௌனியாக இருந்தனர்.அங்கு வந்த லக்ஷ்மியும் அவ்வாறு பேசாமல் இருக்க கண்டு சினம் கொண்ட கண்வ முனிவர் "ஹே! மமதை கொண்ட விஷ்ணுவே நான் பரமேஸ்வரனுக்கு பிரயமானவன் என்று அறிந்தும் கூட என்னிடம் பேசாமல் எம்மை அவமதிதீர், உம் பத்தினியும் எமக்கு மரியாதை செலுத்தாமல் மிருகம் போல உட்கர்ந்துகொண்டிருக்கிறாள். ஆகவே நீர் ஊமை போல பல்லாயிரம் ஜென்மக்கள் பிறந்து உழளுவீர். உமது பத்தினி மானாய் பிறந்து உழலட்டும். இதோ இந்த உபேந்திரன் நீங்கள் வசிக்கும் காட்டில் வேடுவனாக பிறக்க கடவது" என்று சபித்து விட்டு அவ்விடம் அகன்று சென்று விட்டார்.. இது கண்டு மூவரும் பயந்து நடுங்கி செய்வதறியாது திகைத்தனர் அப்போது அங்கு வந்த பிரம்மாவிடம் புலம்பினர். நிலைமையை கண்டு வருந்திய பிரம்மாவும் சிவா சம்புவிடம் சென்று சரணடைவோம் என்று கூற நால்வரும் திருவாரூர் சென்று பரமேஸ்வரரை தரிசித்து தம் பாவத்திற்கு தகுந்த பரிகாரம் தருமாறு வேண்டினர். சிவனாரும் சாபம் அளித்த கணவரை நினைத்து அவரை தருவித்தார். கணவரிடம் சம்புவானவர். இங்கு உள்ளவர்கள் அனைவரும் நம் பக்தர்கள் ஆகையால் உன் சாபத்தின் தன்மையை குறைத்து பல ஜென்க்மாக்கள் என்று அளித்த சாபத்தினை குறைத்து ஒரு ஜன்மாவில் அவர்களுக்கு இத்தகைய துன்பம் வர வேண்டுமாறு கூற வேண்டும் என்று சம்புவாணர் கேட்க அவ்வாறே ஆகுக என்று கணவர் ஒப்புக்கொண்டு பரமேஸ்வரரை வேண்டி சென்றார். அதன்படி விஷ்ணுவும் ஊமை சிவ முனிவராக காட்டில் பிறந்தார். ஸ்ரிமாஹலக்ஷ்மியும் காட்டில் பெண் மானாக பிறந்தாள். உபேந்திரன் முதலியவர்களும் காட்டில் வேடர்களாக பிறந்தனர். அப்போது ஒரு நாள் காட்டில் சிவா முனிவர் அந்த பெண் மானை பார்க்க அந்த தருணத்திலேயே அம்மான் கர்ப்பமுற்று தங்க நிறமுள்ள, மிகவும் அழகு பொருந்திய ஒரு பெண் குழந்தையை அந்த பெண் மான் ஈன்று விட்டு அங்கிருந்து ஓடியது. முனிவரும் அவ்விடம் அகன்று சென்று விடவே, காட்டில் உபேந்திரன் அந்தஅப்பெண்குழந்தையை தன் சேரிக்கு சென்று வள்ளி என்று பெயரிட்டு வளர்த்து முருகனுக்கு திருமணம் செய்வித்தான். பின்னர் அனைவரும் அவர்தம் சாபத்திலிருந்து விடுபட்டு தம்முலகம் சென்றனர் என்று ஸ்கந்த புராணம் கூறுகின்றது.
 
  


தசாவதாரம் - ஸ்கந்த புராண விளக்கமும் - 8
===============================
திரிபுராந்தகரும், புத்த தேவரும்
நான் அடுத்த பதிவில் முடியும் என்று சொல்லிவிட்டேனே தவிர இதை அப்படியே ஸ்கந்த புராண சிவசம்ஹிதையில் உபதேச காண்டத்தில் இருப்பதை போலnகொடுக்கலாம் என்று முயன்றேன்.முடியவில்லை. ஆகையால் இதனை விரிவாக போடலாம் என்று முடிவெடுத்து விட்டேன். சிவ கதைகளை கேட்க நமக்கென்ன புளிக்குமா?
நாம் ஹயக்ரீவரின் அவதாரத்தினை முன்னரே பார்த்துவிட்டோம் ஆகவே இனி புத்த அவதாரத்தினை சிந்திப்போம்.
ஒரு முறை தாரகாசுரனுடைய புத்திரர்களான வித்யுன்மாலி, தாரகாக்ஷன், கமாலாக்ஷன் என்கின்ற மூன்று பிள்ளைகள் இருந்தனர் அவர்கள் பிரம்மனை குறித்து கோரமான தவத்தினை இயற்றி மரணமில்ல வரத்தினை வேண்டினார்கள். பிரம்மனோ தனக்கும் விஷ்ணுவுக்குமே இறப்புண்டேனில் அவர்களுக்கு இரவா வரத்தினை தம்மால் கொடுக்க இயலாது என்றும் வேறு வரங்களை கேட்குமாறும் வேண்டினர். அதனால் மூன்று பெரும் பெரும் ஆலோசனை செய்து "தேவனே, எங்கள் மூவருக்கும் முறையே பூமி அந்தரிக்ஷம், சுவர்க்கம் ஆகிய மூன்று லோகங்களில் இரும்பு, வெள்ளி, தங்கம் ஆகிய மூன்று பட்டிணங்கள் ஏற்படவும் அதை நாங்கள் மூவரும் ஆட்சி செய்து எங்களுக்கு இஷ்டபட்ட இடத்தில் அதை நிலை நிறுத்த அதிகாரமும், அவை எங்கு வேண்டுமானாலும் சஞ்சரிக்கின்ற சக்தியும் வேண்டும் , மேலும் அவை ஆயிரம் வருடங்களுக்கு ஒருமுறை ஒன்று சேர வேண்டும். அப்போது எவர் ஒருவர் வேதத்தில் தன்னிகரில்லாதவர் என்று வருணிக்க படுபவரோ அவரால் ஒரே க்ஷணத்தில் அந்த பட்டினங்கள் அழிக்க பட்டாலன்றி எங்களுக்க் அழிவு ஏற்ப்பட கூடாது அப்போது மட்டுமே எங்களுக்கு மரணம் நிகழ வேண்டும். இந்த வரத்தினை தாங்கள் அளிக்க வேண்டும்!" என்று வேண்டினர்.
பிரம்மாவும் அவ்வாறே ஆகுக என்று கொடுத்தருளினார்.
இதை கேள்விப்பட்டு தேவர்களுக்கு பயந்த அசுரர்கள் எல்லோரும் அவர்களுடன் சேர்ந்துகொண்டு தங்கள் குறைகளையும், அவர்களுக்கு காணிக்கயாக தங்கள் சிறந்த புத்திரிகளையும் அவர்களுக்கு கொடுத்தார்கள். உடனே அவர்கள் மூவரும் மயனை நினைக்க, அவரும் உடனே சந்தோஷத்துடன் அங்கு வந்து, அவர்களுடன் ஆலோசித்து சிறந்த அமைப்பில் தங்கம், வெள்ளி, இரும்பு ஆகியவற்றால் அவர்களுக்கு பறக்கும் பட்டினங்களை உண்டாக்கி அதில் சிறந்த ரத்தினங்கலாலும், மணிகளாலும் ஆன மாட மாளிகைகள் கூட கோபுரங்கள், வீதிகள், சாலைகள் ஆகியவற்றுடன் கூடிய கட்டிடங்களையும் நிர்மாணித்து கொடுத்தான். அதை கண்டு அவனை அசுரர்கள் பலவாறு மெச்சினர். அவர்களுக்கு மயன் சந்தோஷமடைந்து "அசுரர்களே! சிறந்த முறையில் தவம் இயற்றி ஆயிரம் வருடங்களுக்கு ஒருமுறை ஒன்று சேரும் பட்டினங்களை சேரும்போது அதனை அழிக்கவும் மரணம் என்ற வரத்தினை பெற்றுள்ளீர்கள்! இது புத்திசாலித்தனமே! என்றாலும் வேதங்கள் கூறும் சிறந்த சத்புருஷன் என்று பரமேஸ்வரன் உள்ளார், அவர் சிறந்த வேகமாய் செல்லும் அம்புகளையும், உறுதியான வில்லினையும் உடையவர். எதிரியிடத்தில் பொறுமையின்மையும், தம் பக்தர்களிடத்தில் அன்பையும் உடையவர் என்றும் அவர் செய்த குற்றங்களை பொறுப்பவர் என்றும் மிக சக்திவாய்ந்த ஆயுதங்களை உடையவர் என்றும் வேதங்கள் சொல்லுகின்றன. அவரை வணங்குவதால் என்றும் ஜெயம் ஏற்ப்படும். மேலும் வியாதி, பீடை, எதிரிகள் தொல்லை என்று எதுவும் நிகழாது. மேலும் அந்த முக்கண்ணனே உங்களுக்கு அத்ரிஷ்டதினை அளிப்பவர் ஆகவே நீங்கள் சிறிதும் தயக்கமின்றி அவரை வேண்டி ஜெகதீசன் அருளை பெற்றால் உங்களை எவராலும் வெல்ல இயலாது. என்று ஆலோசனை கூறினார். ஆகவே அந்த மயநிடத்தில் அம்மூவரும் சிறந்த லிங்க வடிவினை தருமாறு வேண்டினர். அவனும் ஒரு க்ஷணத்தில் சிறந்த லிங்கங்களை அவர்களுக்கு அளித்தான். மேலும் ருதிராக்ஷங்களையும் விபுதியினையும் கொடுத்து அவர்களுக்கு சிவபூசையினை உபதேசித்தான்.
உடனே அம்மூவரும் அவ்வாறு சிறந்த லிங்கங்களை அவர் அரண்மனையில் வைத்து பூஜை செய்ய துவங்கினர். மேலும் அந்த நகரத்தில் உள்ள அனைவரும் சிவபூஜையினை தொடர்ந்து செய்யுமாறு வேண்டினர். ஆகவே அந்நகர அசுரர்கள் அனைவரும் அரசர்களை போலவே சிவபூஜை செய்ய துவங்கினர். இவ்வாறு வெவ்வேறு நிலைகளில் பூஜை செய்ததால் சம்புவானவர் மகிழ்ந்து அவர்களுக்கு பல அபீஷ்டங்களையும் பூர்த்தி செய்தார். அதனால் அன்னகரங்கள் மூன்றிலும் ஐய்ச்வர்யம் பெருகியது. சிவபூஜையே செய்யும் அம்மூவருக்கும் வேதங்களில் சொல்லப்பட்ட அனைத்து இன்பங்களும் பெருகின. கற்பக விருட்சங்களே அவர்கள் வீட்டு கொல்லை மரங்களாயின. காமதேனுக்களே அவர்கள் வீட்டு பசுக்களாகின. சிந்தாமநிகளே அவர்கள் வீட்டி திண்ணை படி கற்கள் ஆகின. இவ்வாறு அணைத்து இன்பங்களும் சந்தோஷமும் கூத்தாடின. விதவிதமான கேளிக்கைகளிலும் ஈடுபட்ட அசுரர்கள் சந்தோஷமாக பொழுதை போக்கி கொண்டிருந்தனர். அவர்களால் எப்போது நிச்சயிக்க பட்டனவோ அப்போது திடீரென்று சூரியமண்டலம், சந்திர மண்டலம், சத்யலோகம், வைகுண்டம்,பூலோகம் ஆகாயம், இந்திரலோகம், அட்ட திக்லோகங்கள் என்று எதோ ஒரு உலகத்தில் அந்த நகரங்கள் உட்கார்ந்துகொண்டது. அதனால் பல்லாயிரகணக்கான தேவர்கள் நசுக்கபெற்று துன்பப்பட்டனர். அவர்களை சிறை பிடித்து வீட்டு வேலைக்கு அவர்களை அசுரர்கள் சிறைபிடித்தனர்.
இதனால் தொல்லை பொறுக்காமல் எஞ்சி இருந்த தேவர்கள் எல்லாம் மகாமேரு பர்வதத்தில் அடைக்கலம் புகுந்தனர். அவர்கள் எல்லோரும் விஷ்ணுவிடம் இவர்களை எவ்வாறு கொல்லுவது என்று ஆலோசித்தனர். விஷ்ணுவோ தம்மால் அவர்களை கொல்ல இயலாது என்றும் மேலும் சிவபூஜை செய்யும் பக்தர்களை ஜெயிக்க முடியாது. மேலும் அவர்கள் பத்தினிகள் சிறந்த பதிவிரதைகளாக இருக்கும்போது எவராலும் அவர்கள் கிட்டே கூட நெருங்க முடியாது என்று கூறினார். அப்போது இந்திரன் அவர்கள் அனைவரும் மயன் என்ற தச்சன் சொல்லை கேட்டு பூஜை செய்கின்றார்களே தவிர அவர்கள் பக்தியின்றி செய்யவில்லை.அது பரமனுக்கு அவ்வளவு ப்ரீதி ஏற்படுத்துவதில்லை. ஆகவே யாகங்களில் நாம் ஜெகதீசனுக்கு ப்ரீதி ஏற்படுத்தி அநேகம் பூதங்களை உண்டாக்கி அவர்களை கொன்று விடுவோம் என்று கூறினான். விஷ்ணு," நீ அவர்கள் வரங்களை அறியவில்லை பரமேஸ்வரனே ஒரே பாணத்தில் அந்நகரை அழிக்கும் வரை அவர்களை யாராலும் ஜெயிக்க முடியாது அப்படி இருக்க உபசத்தினால் உண்டாகும் பூதங்களை (யாகத்தின கெடுக்கும் அரக்க சக்தியினை அடக்கும் கர்மாவிற்கு உபசத் என்று பெயர் ) கொண்டு அவர்களை எப்படி அழிக்க இயலும் என்று கூறினார்.ஆயினும் தேவர்கள் அவ்வாறே யாகத்தினை இயற்றி பெரும் பூத கணங்களை வரவழைத்து திரிபுரதினை அழிக்க சந்தோஷத்துடன் ஏவினர்.
திரிபுரதினை அழிக்க சென்ற அவைகள் எங்கு நோக்கினும் விபூதி ருத்ராக்ஷம் லிங்கம் போன்ற சிவசின்னங்களை கண்டு அஞ்சி வெறும் குரங்குகள் போல வனங்களை அழிக்க துவங்கின. அதை கண்டு அசுரர்கள் அவைகளுடன் போரிட்டனர். சிவன் கட்டளையால் அப்பெரும் பூதங்கள் அழிந்தன. இது தேவர்களின் வேலை என்று உணர்ந்த அவர்கள் தேவர்களை நன்றாக அடித்தனர் அதனால் தேவர்கள் பெரும் துன்பம் அடைந்து மேருமலைக்கு சென்றனர். நடந்தவற்றை எல்லாம் கூறினார். ஆகவே நாம் கைலாயம் அடைந்து தேவதேவரிடம் முறையிடுவோம் என்று சென்றனர். அனால் வாயில் காப்போர்கள் அவர்களை உள்ளே செல்ல விடாமல் தடுத்து திருப்பி விட்டனர். ஆகவே கதியில்லாமல் மீண்டும் மானசரோவரத்தில் நின்று "நமக்கு வேறு கதியில்லாததால் இதற்க்கு வேறு உபாயம் வேண்டும். அசுரர்கள் எல்லோரும் எந்நேரமும் சிவச்தோதிரமும் லிங்கார்ச்சனைகளும், யாகங்கள் செய்வதாலும், வேதம் ஓதுவதில் விருப்பம் உள்ளதாலும், முக்கியமாக அவர்கள் பத்தினிகள் கற்புடன் உள்ளதாலும் என்றுமே நாம் அவர்களை ஜெயிக்க முடியாமல் போகிறது. ஆகவே தாம் மாயத்தினை பயன்படுத்தி அவர்களை லிங்க அர்ச்சனை செய்வதில் இருந்ந்து மாற்றி விட வேண்டும் என்று கோரினர்.
விஷ்ணுவும் நாம் அவர்களை மற்ற அவர்களை வேறு மார்கத்திற்கு திருப்ப வேண்டும் அதற்க்கு நாம் வேறு வழியினை சிந்திக்க வேண்டும் ஆனால் நீங்கள் தொடர்ந்து சிவாராதனை செய்தால் ஜெகதீசன் அவர்களை சம்ஹரித்து விடுவார் என்று சொல்லி தான் ஒரு புத்தனாகவும், தன் சீடர் நாரதரை அவர் சீடராகவும் மாற்றி கொண்டு அவ்விருவரும் திரிபுரதிர்க்கு சென்று மீண்டும் மீண்டும் இனிமையான வார்த்தைகளாலும், மாயமான சாச்திரங்களாலும், விசித்திரமான வேஷங்களாலும் அதே விதமான போஜனங்களாலும் அந்த அசுர குலத்தினை க்ஷண நேரத்தில் மனதினை மாற்றி விட்டார்கள். மேலும் அவர்கள் அசுர ச்த்ரிகளைடம் ஹிதமாக பேசி பற்பல ஆடை ஆபரணங்களை பரிசளித்து அவர்கள் கற்பையும் கெடுத்து விட்டனர். இப்படி செய்யும் இவர்களின் சொற்படி எல்லாம் அசுரர்கள் ஆடினார்.
இப்படி இருக்கையில் நாரதரை கண்டு பேசி புத்தரை பற்றி கேட்டனர். நாரதரும் "தம் குரு இருப்பது சக்கிரவாளகிரி, இந்திரியங்களை ஜெயித்த இவர் தம் இஷ்டப்படி எங்கும் செல்லும் ஆற்றலை பெற்றவர். அவர் செல்லும் இடங்களில் எல்லாம் தம் தர்மத்தினை எடுத்து கூறுவதே இவர் செயல்!" என்றார். அதனை கேட்டு அசுரர்கள் கூட்டமாக புத்ததேவரை சூழ்ந்தனர். அவர்களுக்கு பல அபீஷ்டங்களையும் அவர் நிறைவேற்றினார். மேலும் நாரதரை தனியே அழைத்து "இவர் சீடரகளுக்கு இந்த சக்தி கிடைக்குமா இவரை வனுங்குதளால் சித்தி உண்டாகுமா அதனால் என்ன பயன்?" என்று கேட்டனர். நாரதர் "அவர் சீடரில் நானே புத்தியற்ற மூடன் எனக்கே எத்தனை சக்தியிருகிறது என்றால் மற்றவர்களை கேட்பானேன் பாருங்கள்!" என்று கமண்டலத்தில் இருந்து சிறிது ஜலம் எடுத்து வானில் தெளித்தார்.
உடனே அங்கு பிரம்மா விஷ்ணு முதளில்யவர்கள் அனைவரும் வந்து புத்தரை வணங்கினர். மேலும் தம் சக்தியினால் அமிர்தினை வரவழைத்து அவர்களுக்கு தந்தார். அது கண்டு வியந்த அசுரர்கள் மிகவும் மகிழ்ந்தனர். உடனே நாரதர் அவர்களிடம் அனைவரும் சீடர்களாயினர். அவர்களுக்கு தீட்சை அளித்து சீடர்களாக்கி அசுரர்களே "இனி நீங்கள் உடனே அனைவரும் அவர்கள் செய்யும் சிவ பூசையினை நிறுத்தி விட்டு புத்தரின் நாமவையே ஜெபிக்க வேண்டும் கண்ணுக்கு தெரியும் அனைத்துமே உண்மையாகும். பிரதியக்ஷ்மாக காணாத பொருட்கள் எல்லாம் பொய்யே என்று உணருங்கள். லிங்க அர்ச்சனை ருத்ராக்ஷம் அணிதல், விபூதி தரித்தல் கூடவே கூடாது.
வேதங்கள் எல்லாம் பொய் என்னை அன்றி வேறு ஒரு தெய்வத்தினை அர்ச்சனை செய்வோருக்கு இவ்வுலகத்தில் எந்த இன்பமும் கிட்டாது என்று கூறினார். ஆகவே அனைத்து அசுரர்களும் அவரிடம் சீடர்களாக மாறி சைவ மதத்திற்கு உரிய சிவா சின்னகள் களைந்து விட்டனர். தவிர அங்கு உள்ள பதிவிரதைகள் அனைவரும் தம்மிஷ்டப்படி அனைவரையும் மோகித்து பிற புருஷர்களுடன் மோகித்து அனைத்து தர்மங்களையும் விட்டனர். மேலும் அவர்கள் நாரதர் கொடுத்த புடவைகள் வஸ்திரங்கள் தரித்து சுவற்றையும் துடைப்பத்தையும் கொண்டு பூஜித்து கொண்டு சதா விபசாரம் செய்து கொண்டு இருந்தனர். பிறகு விஷ்ணுவானவர் நாரதரிடம் தம் திட்டம் எவ்வாறு செயல் படுகிறது என்று கேட்டார். நாரதர் "சுவாமி! மூன்று பட்டினங்களில் உள்ள அனைவரும் தாம் இட்ட திட்டத்தின் படி சிவசின்னங்களை களைந்து விட்டு தர்மத்தினை துறந்து விட்டனர். சீலிபார், பரமயோகி, விரக்தயோகி ஆகிய மூன்று அசுரர்களை தவிர அனைவரும் சிவபூஜையினை விட்டனர். யானையினை எவ்வாறு சிறு கயிறு கட்ட முடியாதோ அவ்வாறே இந்த சிவபக்த அசுரர்களை நாம் மாயையால் வெல்ல முடியாது!"என்று கூறினார். அவர்களுக்கு விஷ்ணு மனத்தால் நமஸ்கரித்து விட்டு பக்தர்களே நம் சொல்லுக்கு கட்டு படாத அம்மூவருடனும் எவரும் பேசகூடாது மேலும் அவர்களை மறந்து விட்டு அவர்களுக்கு துன்பம் செய்யாதீர் என்று சொல்லி விட்டு அங்கிருந்து கிளம்பி நாரதருடன் சென்று கைலாசம் ஏற முற்பட்டனர். ஆனால் பாவம் செய்த அவர்களால் அதன் மீது ஏற முடியவில்லை, இதனால் விஷ்ணு "பார்த்தாயா? நாரத நாம் தேவ காரியமாக சிவபூஜையை கெடுத்த பாவம் இது. என்று கூறு அவருடன் கடும் தவம் இயற்றினார். சிவனாரும் அங்கு பிரசன்னராகி கோபத்துடன் மேக கர்ஜனை போன்ற குரலுடன் அங்கு வந்து விஷ்ணுவை பார்த்து "சீ! சீ! நீர் தேவ காரியமானாலும் எம் பக்தர்களான அசுரர்களை சிவபூஜை செய்யாமல் தடுத்ததனால் உங்களுக்கு இந்த பாவம் வந்தது. ஆயினும் நீர் தொடர்ந்து மானசசரத்தில் தேவர்களுடம் தொடர்ந்து முயற்சி மேற்கொள்ளுங்கள்!" என்று சொல்லி மறைந்தார்.



தசாவதாரம் - ஸ்கந்த புராண விளக்கமும் - 9
===============================
சிவனால் கண்டிக்க பெற்ற விஷ்ணுவும் நாரதரும் மானச சரத்தில் சென்று நடந்தவற்றை கூறி கேளுங்கள் தேவர்களே நங்கள் திரிபுரதிர்க்கு சென்று எங்களுடைய மாயையினால் அவர்களை சிவா ஆராதனை செய்வதிலிருந்து தடுத்து கெடுத்துவிட்டோம். மேலும் இப்போது சுக்கிராச்சரியரும் மயனும் சிவனின் கட்டளையால் ஒருவருக்கொர்வர் சண்டையிட்டு கொண்டு அங்கிருந்து கிளம்பி சென்று இமயமலையில் தவம் செய்து கொண்டிருக்கின்றனர், இந்த சமயத்தில் தான் அதிர்ஷ்ட வசமாக நம்முடைய திட்டம் கைகூடியது. இந்த சந்தர்ப்பத்தினை பயன்படுத்தி அந்த சதாசிவனை குறித்து நம் எண்ணம் நிறைவேற நாம் வேண்டுவோம் என்று கூறி அவர்கள் அனைவரும் மானசசரத்தில் தண்ணீரில் மூழ்கி கோடி ருத்திர ஜபம் செய்யலாயினர். அந்த தவத்தினை மெச்சி ரிஷபாரூடராக பரமேஸ்வரன் உமையுடன் காட்சி தந்தார். தேவர்களே நீங்கள் அனைவரும் இந்திரிய ஜெயத்துடன் எம்மை கொடிய ஜெபத்தால் ப்ரீத்தி செய்தீர்கள் நீங்கள் உடனே தாமதமின்றி பாசுபத விரதத்தினை (விரஜா ஹோம முறைப்படி விபூதி தயாரித்து அதை அணிந்து சிவனை துதித்தல்) மேற்க்கொண்டு எம்மை வணங்கினால் தாமதமின்றி உமக்கு சகாயம் கிட்டும் என்று கூறினார். அப்போது சுப்பிரமணியர் சிவனாரின் மார்பில் ஏறி நடனம் ஆட முனைந்தார். அதனை கண்டு சந்தோஷித்து பரமனும் சிவகுமார! நடனம் ஆடு என்று கட்டளையிட்டார். உடனே பாலகுமாரனும் நடனம் ஆடினார் சிவனாரின் கட்டளைகிணங்க ஆடு என்று சொன்னவுடன் யார் தான் மீற முடியும்? ஆகவே சகல லோகமும் நடம் புரிந்தது. அங்கிருந்த தேவர்கள் உட்பட அனைவரும் ஆனந்த கூத்தாடினர்.
சிவனாரும் சுப்ரமணியரை அணைத்துக்கொண்டு தம் பரிவாரங்களுடன் மறைந்தார். தேவர்கள் மீண்டும் கூடி ஆலோசித்து நாம் பரமேஸ்வரனை கண்டும் நம் குறிக்கோள் நிறைவேறாது போனது நம் துர்பாக்கியமே, ஆகவே நாம் தாமதமின்றி பாசுபத விரதினை தொடங்க வேண்டும் என்று முடிவெடுத்து சிறந்த முறையில் விரஜா ஹோமம் செய்யப்பட்ட விபூதியை தரித்துக்கொண்டு பாசுபத விரதம் மேற்கொண்டனர்.
இந்த தவத்தினால் பரமேஸ்வரர் மகிழ்ந்து, நந்தியை அழைத்து " நந்திகேஸ்வரா! முப்புரங்களை அழிக்க எம்மிடம் தற்போது கருவிகள் இல்லாததால் நீ தேவர்களிடம் சென்று நாம் போர் செய்ய தேவையான கருவிகளும் மேலும் தேர், சாரதி, வில் அம்பு, குதிரைகள், ஆயுதங்களையும் திரட்டுமாறு உத்தரவிடு!" என்று கூறினார்.
இதனை கேட்ட தேவர்களும் விஷ்ணுவும், பிரம்ம முதலியவர்களும் களித்தனர். உடனே தேர், சாரதி, வில் அம்பு, குதிரைகள் இவைகளை நினைத்து நீண்ட நேரம் விவாதித்தனர்.
உடனே ஜெகதீசனுக்கு தகுதியான உறுதியான வில் தங்க மயமான மேரு மலை என்றும், அதற்க்கு தகுதியான நாண் ஆதிசேஷன் ஒருவனே என்றும், வாயு சரத்தின் இறக்கையாகவும், அக்னி பாணத்தின் பிடியாகவும், சந்திரனை உடலாகவும், விஷ்ணு பாணத்தின் முனையாகவும், அப்படிப்பட்ட தேவர்கள் நான்கு பேர் சேர்ந்ததாக ஒரே பாணமாகவும், விந்திய மலையினை தேரின் அச்சாகவும், கேசரியே அந்த அந்த அச்சுக்கு மேல்பாகத்தின் விட்டமாகவும், பூமியே அந்த விட்டத்தின் மேல்புற ஆசனமாகவும் செய்தார்கள்.
ஆகாயமே அந்த ரதத்தின் இடைவெளி ஆயிற்று. சந்திர சூரியர்கள் அந்த தேரின் சக்கரங்கள் ஆனார்கள். பரிசுத்தமான ரிக், யஜுர், சாம, அதர்வண, வேதங்கள் அந்த ரதத்தின் வெண் புரவிகள் ஆயினர். வசிஷ்டர் முதலிய ரிஷிகள் எல்லாம் ஸ்வச்திவாசனம் சொல்லுவதில் ஈடுபட்டனர். கின்னரர், யக்ஷர், சித்தர், கிம்புருஷர் இவரேல்லோரும் கட்டியக்காரர்களாகவும், மற்றும் கந்தர்வர், கருடர், சாரணர், முதலியவர்கள் கவீஸ்வரர்களாகவும், எட்டு குல பர்வதங்கள், எட்டு மகா நாகங்கள், சமுத்திரங்கள் மேக கூட்டங்கள் இவர்கள் எல்லாம் அந்த ரதத்தின் மணிகள், நவரத்தினங்கள் ஆபரணங்கள் இவைகளாயின. மேலும் மந்திரங்கள், அறுபத்து நான்கு கலைகள், காமதேனுக்கள், திதிகள், இவைகள் அந்த ரதத்தின் சம்பத்துக்களாகவும், யாகங்கள், கர்மங்கள், தர்மங்கள், காலங்கள், கல்பங்கள், இவைகள் சிறிய ஆணிகளாகவும், தினங்கள், மாதங்கள், ருதுக்கள், அயனங்கள், யோகங்கள், கரணங்கள், க்ஷணங்கள், முகூர்த்தங்கள்,காஷ்டைகள், ரதத்தின் பெரிய ஆணிகளாகவும் ஆயின.
பிரணவமானது குதிரைகளின் சாட்டையானது. இவ்விதமாய் இதமானது தயாரிக்க பட்டது.
Note: (இதிலேயே எத்தனை பிரம்மா விஷ்ணு ஒரே காலத்தில் இருந்துள்ளனர் என்று விளங்கும்)
இதன் மேல் பிரம்மா ரத சாரதியாக அமர்ந்தார். க்ஷீராப்தி சாகரத்தில் இருக்கும் மகாவிஷ்ணு பாணத்தின் முனையாகவும், வைகுண்டத்தை வாசஸ்தலமாக கொண்ட விஷ்ணு அவர் வேலைக்கரராகவும், மேரு மலை மீதுள்ள மனோவதி பட்டினத்தில் உள்ள பிரும்மா சாரதியாகவும், சதியலோகத்தில் உள்ள பிரும்மா பரமேஸ்வரருக்கு பரிசாரகராகவும்,
Note:
தேவர்களெல்லாம் அவர்தம் சைன்யங்களாகவும், இந்திரன் முதலிய தேவர் தலைவரெல்லாம் சேனாதிபதிகளாகவும், ஆயினர். இந்த விருத்தாந்தங்களை எல்லாம் விஷ்ணுவானவர் நந்திகேஸ்வரரிடம் சென்று கூறினார். அவ்வாறே நந்தியும் கைலையம்பதியினை வேண்டி இந்த விஷயங்களை தெரிவித்தார். அப்போது ஜெகதீசன் இந்த விண்ணப்பங்களை எல்லாம் கேட்டு மகிழ்ந்து உமையுடன் ரிஷபம் மீது ஏறி தெரினருகில் வந்து சேர்ந்தார். தேவர்கள் அனைவரும் ஸ்ரீ சாம்ப மூர்த்தியை கண்டு தொழுதனர். அவரும் மனமகிழ்ந்து இறங்கி உமையுடன் வில்லையும் அம்பையும் எடுத்துக்கொண்டு ரதத்தின் மீதுன் ஏற தேரின் மீது காலை ஊன்றினார்.
அப்போது அங்கு சட சட என்ற சத்தத்துடன் பரமனின் பாரம் தாங்காது அந்த ரதம் பாதாளத்தினுள் அழுந்திவிட ஆரம்பித்தது. உடனே அனைவரும் அது கண்டு அஞ்சினர். விஷ்ணு உடனே ஒரு பெரிய வெள்ளை ரிஷபமாக உருமாறி அந்த தேரினை சுமந்து தாங்கினார். அவரும் அந்த பெரிய பாரத்தினை தாங்க முடியாமல் விழி பிதுங்கி வாயினால் ரத்தம் கக்கிமயங்கி விழுந்தார். அப்போது தேவர்கள் அனைவரும் அவரை தொழுதனர். அதன் பிறகு சம்புவானவர் கருணையுடன் விஷ்ணுவிற்கு காற்றை விட பலத்தினை அருளினார். உடனே விஷ்ணுவானவர் தம் பலத்தால் தேரினை தம் திமிழில் சுமந்து தூக்கி நிறுத்தினார் .பின் அவர் சம்புவை பலவாறு துதித்தார். அவரை பரமன் வேண்டிய வரம் கேட்க தூண்டினார்.
விஷ்ணுவும் அவரிடம்" பிரபு! எப்படி தங்களுக்கு ஒரு சக்தி இருந்தும் நான் அனைத்திற்கும் மூல சக்தியாக இருக்கின்றேனோ, அது போலவே தங்கள் ரிஷபம் இருக்கும் போது நானும் ஒரு ரிஷபமாக இருந்து வர வேண்டும்.
ஜகத் குருவே! இதை தவிர எனக்கு உங்களிடமிருந்து மாறா பக்தி வேண்டும்" என்று வேண்டினார். அதை ஏற்று கொண்டு சம்பு அவ்வாறே அருளினார். இதை கண்ட தேவர்கள் எல்லாம் சந்தோஷமடைன்தனர்.பின்னர் தேவர்கள் எல்லாரும் இந்த விக்கினதினை ஏற்படுத்திய விக்னேஸ்வறரை நினைத்து அவருடன் மன்னிப்பு வேண்டினர். உடனே அவருக்கு பல வித பக்ஷ்யங்கள், போஜனங்கள், பழவகைகள் மோதங்கள் என்று அனைத்து நிவேதனங்களையும் படைத்து பலவாறு துதித்தனர்.
பரமேஸ்வரரும் அவருக்கு தந்தையை இருப்பினும் அவருக்கு பூஜை செய்தார். பிறகு சாரதியான பிரம்மாவிடம் ரதத்தினை செலுத்துமாறு ஆணையிட்டார். அவரும் தேரை செலுத்தினார். அவர் பின் அவர் பூதகணங்கள் எல்லோரும், கொம்பு, மத்தளம், பேரி, படகம், டின்டிமம், கோமுகம், சங்கு, திமிலம் முதலிய வாத்தியங்களை முழங்கினர். சிலர் நேர்த்தியாக எடுபிடிகளை பிடித்தனர். பிரளய காலத்து கடலோசை போல் அக்கோஷம் விளங்கியது. திக்கெல்லாம் செவிடாக்கிய அந்த இனிய ஓசை அனைவரின் இன்பத்தினையும் அதிகரித்தது. சிவனார் பின் அனைவரையும் தத்தம் வாகனத்தில் ஏறுமாறு பணித்தார்
அவ்வாறே விஷ்ணு கருடனிலும், பிரும்மா அன்னபக்ஷியிலும், இந்திரன் ஐராவததிலும் திக் பாலகர்கள் எல்லோரும் அவரவர் வாகனங்களிலும், கணபதி மூஞ்சூரிலும், முருகன் மயில் மீதிலும் ஏறி முறையே வலம் இடமாக நின்றனர். முன் பக்கத்தில் தங்க பிரம்பினை எடுத்துக்கொண்டு நந்திகேஸ்வரரும் சந்நிதியை மறைக்கும் அனைவரையும் விலக்கி கொண்டே சென்றார். இதை கண்ணுற்ற சித்தர்கள் முனிவர்கள் அனைவரும் "சம்போ மகாதேவா! சிவாய நமஹ என்று துதித்து "நாம் அனைவரும் கிருதர்கள் ஆகிவிட்டோம் உமையுடன் குடும்ப சமேதராக ரத்தத்தில் அமர்ந்திருக்கும் காட்சியை காண கண் போறாதே" என்னே நம் பாக்கியம் நாம் பிறந்த ஜன்மத்தின் பயனை நாம் அடைந்து விட்டோம் என்று புளகாங்கிதம் அடைந்தனர். இந்த நல் வார்த்தைகளை கேட்டுகொண்டே சம்புவானவர் மேற்கொண்டு பயணம் ஆனார். இதை கண்ட தும்புரு, நாரதர், தேவர்கள் முனிவர்கள், யோகிகள், கானாதிபர்கள், என்று அனைவரும் ச்வச்திவாசனம் பாடினர் . அவர்தம் மனைவிகள் அனைவரும் அதற்க்கு மங்களம் பாடினர்.
இது இவ்வாறு இருக்க விஷ்ணு மாயையினால் மொஹிக்கபட்டு புத்த சமயத்தினை மார்க்கமாக கொண்டு அன்று உள்ளதே நித்தியம் என்று எண்ணிக்கொண்டு சிவார்ச்சனையும், விபூதி ருதிராக்சங்களை களைந்து விட்ட அசுரர்களின் வீட்டில் துற சகுனங்கள் தென்பட ஆரம்பித்தன. அவர்களுடைய காமதேனு, சிந்தமாணி, கற்பக விருட்சங்கள் அணித்து நாசமடைந்தன. ஆயிரம் வருஷங்கள் முடிவும் வந்தது, அவர்கள் பட்டினம் சேரும் காலமும் வந்துவிட்டது. சிவனாரும் முப்புரத்தினை அழிக்க ப்ரீத்தி கொண்டு விட்டார். இதை விட சந்தர்ப்பம் நேருமா? உடனே தேவர்கள் அனைவரும் சிவனாரை வேண்டி உடனே பாணத்தினை போடுமாறு வேண்டினர். சிவனாரும் அனாயாசமாக மேரு மலை வில்லை நாணேற்றி தேவர் களால் ஆன அம்பினை கையில் எடுத்துக்கொண்டு உமையினை பார்த்து சிரித்தார். அந்த புன்னகையுடன் தம் முக்கண்களின் கடை விழிபார்வையால் திரிபுரத்தினை பார்த்தார்.
அப்போது அந்த புன்னகையினில் உண்டாகிய நெருப்பு முப்புரத்தினையும் எரித்தது. அதில் முப்புற்றமும் விட்டில் பூச்சியை போல துவண்டது. அப்போது தேவர்கள் அனைவரும் சீக்கிரம் பாணத்தினை செலுத்தி அவர்களை அழித்து விடுமாறு வேண்டினர். சிவனாரும் அதை ஒப்புக்கொண்டு அசாதாரணமாக வில்லினை வளைத்து டங்காரம் செய்து அவ்வம்பினை செலுத்தினார். அந்த அம்பானது நெருப்பு போல பறந்து முப்புரதினையும் ஒரே நொடியில் எரித்து விட்டது. பின் அந்த நகரத்தில் உள்ள அசுரர்கள் அனைவரும் புத்த மதத்தினை மேற்கொண்டவர்கள் ஆயினும் முன்னர் சிவ பூஜை செய்த பலனை கொண்டு அனைவரும் சம்புவை வேண்டினர். உடனே அவரும் அவர்களை பூத கணங்கள் ஆக்கினார்.

மேலும் அந்த எரியும் நகரில் எப்போதும் சிவபூஜை செய்துகொண்டிருக்கும் சீலிபார், பரமயோகி, விரக்தயோகி ஆகியவர்கள் மட்டும் அத்தீயில் அழியாமல் கடலில் மிதக்கும் கப்பலை போல சுகமாய் இருந்தனர். பெரும் நெருப்பு ஒன்றும் செய்யாததை கண்டு அவர்கள் வியப்புற்றனர்.அம்மூவரும் "நாம் புத்த தர்மத்தினை ஏற்றிருந்தால் நாமும் மற்ற அசுரர்களுடன் சாம்பல் ஆகி இருப்போமே அப்படி செய்யாமல் எப்போதும் சிவனாரையே வேண்டியதால் நம்மை அவர் காத்தனர் இது அவர் அருளன்றோ "என்று மகிழ்ந்தனர். அவர்கள் அங்கு சென்று சம்புவை பலவாறாக தோழி ஆனந்த கண்ணீர் சிந்தினர். அவைகள் வேண்டுதலை மெச்சி அவர்ளை வரம் கேட்குமாறு கட்டளையிட்டார். உடனே" சுவாமி! நங்கள் செய்த தவத்தினை மெச்சி தங்கள் இருக்கும் கொடுமுடி ஸ்தலத்தில் வாயில் காப்போர்களாய் இருக்க வேண்டும் என்று வேண்டினர். ஜெகதீசனும் அவ்வாறே அருளி அவர்களை பிரதம துவார பாலகர்களாய் நியமித்து அவர்தம் குடும்பத்துடன் அந்தர்த்தியாநியானார்.
இந்த அதிசயம் கண்டு பிரம்ம விஷ்ணு முதலியவர்கள் அனைவரும் சம்புவை தவிர எந்த தெய்வங்களையும் லிங்கார்ச்சனை தவிர எந்த பூஜையும் செய்வதில்லை, இதற்க்கு மாறாக செய்வோரை நாம் காணவோ அவருடன் பேசவும் கூடாது அவர்கள் எத்தனை புண்ணியம் செய்த ஆத்மாகலாக இருப்பினும் அது பயனற்று போக கடவது. இது சத்தியம் அன்றி வேறில்லை. என்று சபதம் இட்டு கூறி தத்தம் இடங்களுக்கு சென்றனர் என்று கூறி சூதமுனிவர், சௌனகாதி முனிவர்களே முப்பு அவர்கள் அறிவில்லாமல் செய்த சிவபூஜையும் ஏற்று கொண்டு அவர்களை சிக்ஷிதாலும் அவர்களுக்கு வரமளித்து அவர்களை தம் கணங்களாக ஆக்கி கொண்டார். எந்த துன்பம் வந்தாலும் எவர் கூறினாலும் திட சித்தமுடன் சிவனை வேண்டியவர்களை அவர் பிரதம துவார பாலகர்கள் ஆக்கிவிட்டார். ஆகவே முயன்று மனிதர்கள், யோகிகள், என்று யாராயினும் சிவார்ச்சனை செய்ய வேண்டும் அவரை துதிப்பவர்க்கு பராக்கிரமம், இன்பம், வெற்றி, சந்தொஷங்களைஎல்லாம் ஈசன் அருளுவார். ஆகவே அனைவரும் சிவா பூஜை செய்ய வேண்டும் என்று கூறி இந்த திரிபுராந்தக மூர்த்தி கண்டதினை முடித்தார்.
இவ்வாறு ஸ்கந்த புராணத்தில் வரும் சிவ உபதேச காண்டங்களில் ஸ்ரீமன் நாராயணரின் தசாவதார காரணங்களும் அவற்றிற்கு சம்பு வான ஜெகதீசன் அவரை தடுத்தாட்கொள்ளும் விதங்களும் விரிவாக கொடுக்க பட்டுள்ளது. இதை படிக்கும் அனைவருக்கும் அந்த பார்வதி பரமேஸ்வரரின் பூரண அருள் கிடக்க வேண்டுகிறேன்.
ஓம் நமசிவாய!